சாலையோரத்தில் கழிவு நீர் செல்லும் மதகுவை இறக்குவதற்காக அகலமாக வும் ஆழமாகவும் தோண்டப்பட்ட அகலக்குழியில் காரோடு விழுந்த இந் தியப் பெண் ஒருவரை மீட்பதற்காக நடத்தப்பட்ட போராட்டம் இந்த வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அகல குழியை வாகன மோட் டிகள் தவிர்ப்பதற்காக அதன் சுற்றியும் அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் தடுப்பை மோதிய அந்த இந்தியப் பெண், சுமார் 40 அடி ஆழத்தை கொண்ட அகல குழிக்குள் காரோடு விழுந்தார். காஜாங் பெர்டானாவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. விபத்தில் காஜாங் ஸ்ரீ ஜெலோக் என்ற இடத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஆசிரியை தமயந்தி த/பெ ரெங்கசாமி குளம்போல் வெட்டப்பட்ட அந்த அகலக் குழிக்குள் காரோடு விழுந்தவர் என்று அடையாளம் கூறப்பட்டது. அவர் ஓட்டி வந்த டொயோட்டா வியோஸ் ரகக் கார் அக்குளத்தை சுற்றி போடப்பட்டிருந்த தடுப்பை மோதிய பின் குளத்தினுள் விழுந்தது. மூழ்கிய காரிலிருந்து தப்பிய அந்த ஆசிரியை காரின் பின் இருக்கைக்கு வந்துள்ளார். விபத்தை பார்த்த மலாய் ஆடவர் அக்காரில் ஒருவரின் அசைவு இருப்பதை கண்டு சைகை மூலம் அவரை தள்ளிப்போகச் செய்து ஒரு பெரிய கல்லைக் கொண்டு குளத்தின் மேற்பகுதியிலிருந்து வீசி காரின் பின்புற கண் ணாடியை உடைத்துள்ளார். பிறகு சற்றும் தாமதிக்காமல் அந்த ஆடவர் அக்குளத்தினுள் குதித்து அந்த ஆசிரியையை வெளியே பாதுகாப்பாக கொண்டு வந்துள்ளார். நெஞ்சுப்பகுதியில் பலமாக அடிப்பட்டுள்ள அப்பெண் காஜாங்கிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்புப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளார். பிளாஸ்டிக் பொருளினால் செய்யப்பட்ட தடுப்பை மோதியதால் தான் கார் குளத்தினுள் விழுந்தது என்றும் தற்போது பிளாஸ்டிக் தடுப்புகள் அகற்றப்பட்டு சுற்றிலும் காண்கிரிட் தடுப்புக்கள் போடப்பட்டுள்ளதாக சதீஸ் என்ற இளைஞர் நண்பனிடம் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்