கடந்த ஆண்டு முதல் அனுமதியின்றி பல் மருந்தகத்தை நடத்தியதற்காக இந்தோனேசிய பெண்மணிக்கு நேற்று ஜொகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் மூன்று லட்சம் வெள்ளி அபராதமாக விதிக்கப்பட்டது. செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி முகமட் காலிட் அப்துல் காரிம் முன்னிலையில் தனக்கெதிராக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை மேடானைச் சேர்ந்த சூர்யா எல்வி விஜயா நசூசியன் (வயது 22) ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு அந்த அபராதத்தை விதித்தார். கடந்த மார்ச் 16 ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு ஜொகூர் பாரு லார்க்கின் பெர்டானா, ஜாலான் சூசூரில் உள்ள ஒரு மையத்தில் அக்குற்றத்தை புரிந்ததாக முன்னதாக சூர்யா எல்வி விஜயா நசூசியன் மீது குற்றம் சாட்டப்பட்டது. சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் அனுமதியின்றி பல் மருத்துவம் நடத்தி வந்த அப்பெண்மணி ஆடவருக்கு பல்லை பொருத்தியதாக குற்றச் சாட்டில் தெரிவிக்கப்பட்டது. அக்குற்றத்திற்காக அவருக்கு மூன்று லட்சம் வெள்ளி அபராதமும் ஆறு மாதம் வரை சிறைத் தண்டனையும் விதிக்க சட்டம் வகை செய்கின்றது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்