கெத்தும் போதைப்பொருள் இலைகளை நாட்டிலிருந்து தாய்லாந்திற்கு கடத்த முயன்ற மாதுவை பேராக் மாநில எல்லை பாதுக்காப்புப் படையின் அதி காரிகள் கைது செய்துள்ளனர்.மாலை 4.15 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 30 வயதுடைய தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் கெத்தும் இலை களை தன் காரில் வைத்து கடத்த முயன்றுள்ளார். அதிகாரிகள் விசாரித்த போது அம்மாது தவற்றை ஒப்புக் கொள்ளவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் அவரின் காரை சோதனையிட்டதில் 50 கிலோ கிராம் எடை கொண்ட கெத்தும் போதை இலைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக பேராக் மாநில எல்லை பாதுகாப்புப் படையின் கமாண்டர் கஸ்தூரி ஒத் மான் தெரிவித்தார்.தன் காரின் பின் புறத்தில் கெத்தும் இலைகளை பதுக்கி வைத்ததுடன் தகர துண்டுகளை கொண்டு அவர் மறைத்து வைத்துள்ளார். அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் இந்த கெத்தும் இலைகளை கெடா மாநிலத்திலிருந்து கிலோவிற்கு வெ.30ஐ கொடுத்து வாங்கியதாகவும் அதனை தாய்லாந்தில் கிலோவிற்கு வெ.100ஆக விற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.தற்போது அம்மாது பெங்காலான் உலு மாவட்ட காவல் நிலையத்தில் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கெத்தும் இலைகளும் அம்மாதுவின் காரையும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைத்துவிட்டதாகவும் கஸ்தூரி ஒத்மான் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்