வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 33 வயது ஆடவர் டிரெய்லர் மோதி பலியானார்.இச்சம்பவம் நேற்று காலை 8 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 422.8ஆவது கிலோ மீட்டரில் (புக்கிட் தகார் டோல் சாவடிக்கு அருகில்) நிகழ்ந்தது. சக ஊழியர்களுடன் முகமட் ஷாரோம் டின் என்பவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த டிரெய்லர் லோரி அவரை மோதித் தள்ளியதுடன் அவ்வழியே வந்த மற்றொரு லோரியையும் மோதியுள்ளது.இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் 6 தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்ததாக கோல குபு பாரு மாவட்ட தீயணைப்புப் படையின் அதிகாரி ரொஸ்டி ஷாபி தெரிவித்தார். டிரெய்லர் லோரியால் மோதித் தள்ளப்பட்ட ஆடவர் உயிரிழந்ததை அங்கு வந்த மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அடுத்தகட்ட நடவடிக்கைக்காக இறந்தவரின் சடலத்தை போலீசிடம் ஒப்படைத்து விட்டதாக அவர் சொன்னார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்