காஜாங் போதைப் பொருள் ஒழிப்பு போலீசார் வெற்றிகரமாக 20 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 9.75 கிலோ எடை கொண்ட கஞ்சாவை கைப்பற்றியதாக காஜாங் போலீஸ் தலைவர் ஏசிபி ஒஸ்மான் பின் ருன்யான் நேற்று காலை பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூறினார். இந்த நடவடிக்கையின் போது தாங்கள் ஒரு ஆடவரையும் தடுத்து கவைத்துள்ளதாக அவர் கூறினார். காஜாங் ரயில் நிலைய கார் நிறுத்துமிடத்தில் தாங்கள் இந்த போதைப் பொருளை கைப்பற்றியதாகவும் 10 பொட்டலங்களில் இந்த கஞ்சா இலைகள் கட்டப் பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட ஆடவரிடம் தாங்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் விசார ணைக்குப் பிறகு இந்த நபர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார் என ஏசிபி ஒஸ்மான் கூறினார். வெற்றிகரமாக இந்த போதைப் பொருளை கண்டு பிடித்து பறிமுதல் செய்த காஜாங் போதைப் பொருள் ஒழிப்பு போலீஸ் பிரிவை அவர் பாராட்டினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்