பெஸ்தினோ தங்க முதலீட்டுத் திட்டத்தில் பணம் போட்டு ஏமாந்து நிர்க்கதியாக நிற்கும் முதலீட்டாளர்களின் வாழ்வாதாரத்திற்கு பேரா அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. நாங்கள் கூட்டுறவு முறையில் விவசாயம் செய்து பிழைத்துக் கொள்கிறோம் எங்களுக்கு 1000 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தர வேண்டும் என்ற கோரிக்கை மனுவை பேரா மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜம்ரி காதிரிடம் வழங்க மாநில அரசாங்க அலுவலகம் முன் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் கூடி இருந்தனர். 2006 க்கும் 2009 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பெஸ்தினோ தங்க முதலீட்டுத் திட்டம் நடப்பிலிருந்த போது இதில் 6764 பேர்கள் முதலீடு செய்திருந்தனர். பிரபல நகைக்கடையின் நிறுவனர் இம்முதலீட்டு நிறுவனத்தில் முக்கிய பங்கு வகித்ததால் அவர் மீது உள்ள நம்பிக்கையில் மாதத்திற்கு 30 விழுக்காடு லாப ஈவு கிடைக்கும் என்ற ஆசையில் தனது வாழ்நாள் சேமிப்பு, இபிஎப், வங்கிக் கடன், நகைகள் அடமானம் வைத்து முதலீடு செய்தனர். சுமார் வெ. 411 (ஜூத்தா) இம்முதலீட்டுத் திட்டம் தொடர்ந்து நடை பெற்று வந்த போது இந்த முதலீடு திட்டம் சட்டத்திற்கு புறம்பானது என்று மத்திய வங்கி அறிவித்து நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து இம்முதலீட்டு நிறுவனத்தின் நடவடிக்கை முடக்கப்பட்டது. இதில் பணம் போட்டவர்கள் கதிகலங்கி நின்றனர். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முதலீடு செய்த நிறுவனத்திடமிருந்து போட்ட பணத்தை மீட்பதற்கு பல முயற்சிகள் எடுத்தனர்; அனைத்தும் தோல்வியில் முடிந்தது. தற்போது அந்நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கு இழுவையில் உள்ள நிலையில் மிகவும் பாதிப்புக்குள்ளான முதலீட் டாளர்கள் குறிப்பாக பேரா மாநிலத்தைச் சேர்ந்த 70 விழுக்காட்டினர் தங்களின் வாழ்வாதாரத்திற்கு கூட்டுறவு முறையில் விவசாயம் செய் வதற்கு முடிவு செய்துள்ளனர். விவசாயம் செய்வதற்கு நிலம் வேண்டும் இந்த நிலத்தை மாநில அரசாங்கம் தான் வழங்க வேண்டும்; வழங்க முடியும். அதன் அடிப்படையில் பாதிக் கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் வகையில் பேரா மந்திரி புசார் 1000 ஏக்கர் நிலத்தை கருணை அடிப்படையில் ஒதுக்கி தருவார் என்று பெரிதும் எதிர் பார்க்கிறோம் என்று பெஸ்தினோ முதலீடு மீட்பு பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் குணசேகரன் கூறினார். அரசு வழங்கும் இந்நிலத்தை கொண்டு கூட்டுறவு முறையில் விவசாயம் செய்து அதன் மூலம் பெறப்படும் வருமானத்தை கொண்டு இவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று கூறினார். பெஸ்தினோ முதலீட்டுத் திட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 70 விழுக்காட்டினர் பேரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு பேரா அரசு இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்பது கோரிக்கையாகும். சுமார் எட்டு ஆண்டுகளுக்கு மேல் மிகவும் அவதிப்பட்டு விட்ட இவர்களுக்கு பேரா அரசு உதவிட முன் வருமானால் இது பேருதவியாக இருக்கும் என்று கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்