டான்ஸ்ரீ விருதுக்கு சிபாரிசு செய்வதற்காக ஜொகூர் சுல்தானுக்கு 20 லட்சம் வெள்ளி லஞ்சம் கொடுக்க முன்வந்த 54 வயது ஆடவர் நேற்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் சரண் அடைந்தார். அந்த ஆடவர் சரண் அடைவதற்கு நேற்று இரவு வரையில் காலக்கெடு வழங்கிய ஊழல் தடுப்பு ஆணையம் அவ்வாறு ஆஜராகுவதற்கு அந்த நபர் தவறுவாரேயானால் அந்த நபரின் பெயர் அம்பலப்படுத்தப்படும் என்று எச்சரித்து இருந்தது. இந்நிலையில் அந்த நபர் நேற்று மாலையில் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் சரண் அடைந்துள்ளார் என்று அதன் துணை தலைமை கமிஷனர் டத்தோ அஜாம் பாக்கி தெரிவித்தார். அந்த நபரை விசாரணைக்கு பின்னர் விடுவிப்பதா அல்லது தடுப்புக்காவலில் வைப்பதா என்பது குறித்து இன்று வெள்ளிக்கிழமை முடிவு செய்யப்படும் என்று அஜாம் குறிப்பிட்டார். டான்ஸ்ரீ விருதுக்கு மத்திய அரசிடம் பரிந்துரை செய்வதற்கு தனக்கு 20 லட்சம் வெள்ளியை கொடுப்பதற்கு ஒருவர் முன்வந்ததாக கடந்த சனிக்கிழமை ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மார்ஹூம் சுல்தான் இஸ்கண்டார் தெரிவித்து இருந்தார். அதேவேளையில் திங்கள்கிழமை கோலாலம்பூரில் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் இது தொடர்பாக சுல்தான் புகார் செய்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்