2012 ஆம் ஆண்டில் தமிழ்ப்பள்ளிகளில் கட்டுமானப் பணிகளுக்காக சிறப்பு நிதி ஒதுக்கீட்டினை அறிவித்ததோடு மட்டுமல்லாமல் வரலாற்றில் முதல் முறையாக இந்திய குத்தகையாளர்களுக்கு வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்த பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் முயற்சிக்கு மிகப் பெரிய இழுக்கு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமே நண்பன் குழுவிற்கு ஏற்பட்டுள்ளது. மலேசியாவின் வரலாற்றில் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக அதிகமான மானியங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் (இதுவரை வெ. 800 மில்லியன்) மலேசியக் கல்வியமைச்சின் கல்வி துணையமைச்சராக ம.இ.கா.வின் சார்பில் டத்தோ ப.கமலநாதனின் நியமனமும் விடியல் இல்லா மல் இருந்த தமிழ்ப்பள்ளிகளுக்கு விமோசனம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேறுமா? என்ற கேள்வியை முன்வைக்க வேண்டிய துரதிர்ஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவே அறிய வேண்டியுள்ளது. பள்ளிகளின் கட்டுமானத்தில் வில்லங்கம் 2012 ஆம் ஆண்டில் பிரதமரின் நேரடியான சிறப்பு நிதியின் கீழ் (Projek Rangsangan Khas 2012 - PRK 2012) அடையாளம் காணப்பட்ட 39 தமிழ்ப் பள்ளிகளுக்கான புதிய பள்ளிகளின் கட்டுமானமும் இணைக்கட்டடத்தின் கட்டுமானமும் 2014ஆம் ஆண்டு தொடங்கிய நிலையிலும் இன்னமும் மாண வர்களின் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்துவதற்கு ஏதுவாக கட்டி முடிக்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதற்கு யாருமே பொறுப்பேற்றுக் கொள்ளாமல் எதுவுமே நடவாதது போல் இருந்து வருவது இந்திய சமூகத்தின் இயலாமையைப் பிரதிபலிப்பதாகவே கூற வேண்டிய அவலமான நிலையை யாரிடம் சென்று முறையிடுவது என்றே தெரியவில்லை. அடையாளம் காணப்பட்ட 39 தமிழ்ப்பள்ளிகளில் ஏறக்குறைய ஐந்து பள்ளிகளின் கட்டுமானமே நிறைவு பெற்றிருக்கும் நிலையில் பல தமிழ்ப்பள்ளி களின் கட்டுமானப் பணிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கி இருப்பதை நண்பன் குழு விவரமாக வெளியிட்டு வருகின்றது. * பகாங் லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் விவகாரம் மலேசிய இந்தியர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. * நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பல பள்ளிகள் பயன்படுத்த முடியாமல் மாணவர்களுக்காக காத்திருக்கின்றன. * சிலாங்கூர் களும்பாங் தமிழ்ப்பள்ளிக்கு மாவட்ட அலுவலகத்தின் அனுமதி இல்லாமலேயே மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். * பல பள்ளிகளின் கட்டுமானம் நத்தையைப் போல மெதுவாக எழுந்து வருகின்றது. 2014ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட 39 பள்ளிகளுக்கான கட்டுமானத்தில் முழுமையான கவனத்தையோ அல்லது அக்கறையையோ ப.கமலநாதன் செலுத்தியிருந்தால் சரியான நிவாரணத்தினைக் கண்டிருக்க முடியும் ஆனால் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இவருக்கு நேரமில்லையோ என்ற கேள்வியே நண்பன் குழுவிற்கு ஏற்பட்டுள்ளது. திட்ட மேலாண்மை ஆலோசனை காரணமா? முதல் முறையாக இந்தியக் குத்தகையாளர்களுக்கு கல்வியமைச்சின் வழி தமிழ்ப்பள்ளிகளுக்கான கட்டுமான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில் சரியான தடத்தில் திட்டங்களை மேற்கொள்ள ஏதுவாக வெ.4.46 மில்லியன் தொகையில் திட்ட மேலாண்மை ஆலோசக நிறுவனமாக (Project Management Consultant - PMC) இசிஎல் மானேஜ்மெண்ட் (ECL Management) நிறுவனம் நியமிக்கப்பட்டிருப்பது உண்மையானால் மேற்கண்ட 39 தமிழ்ப் பள்ளிகளின் கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளுக்கும் தாமதத்திற்கும் வில்லங்கத்திற்கும் இ.சி.எல் ஆலோசக நிறுவனமே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்பது சரிதானே? * 21.3.2014 தொடங்கி 21.11.2016ஆம் ஆண்டு வரை நிர்ணயம் செய்யப்பட்ட கட்டுமானப் பணிகள் ஏன் முழுமை பெறவில்லை. * தேர்வு செய்யப்பட்ட பள்ளிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை ஏன் ஆலோசக நிறுவனத்தால் தீர்க்க முடியவில்லை? * பகாங் லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பிரச்சினைகளுக்கு ஆலோசக நிறுவனமே காரணமா? * துணைக்கல்வியமைச்சரின் முடிவையும் எதிர்க்கும் வல்லமை ஆலோசக நிறுவனத்திற்கு உண்டா? * பிரதமரிடம் இ.சி.எல் ஆலோசக நிறுவனத்தை நியமனம் செய்யும்படி மலேசிய இந்திய குத்தகையாளர் சங்கத்தின் வழி (Malaysian Indian Builders Constractors - IBC) (Ruj IBC-PM 01-170113) கோரப்பட்டிருந்த நிலையில் இரண்டு அமைப்புகளும் ரகு என்பவருக்கு உரிமையானதா? 39 தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள விவகாரத்திற்கு முழுமையான விளக்கத்தினை வி.கே.ரகு வழங்குவாரா போன்ற கேள்விகளுக்கு நண்பன் குழு விடையைத் தேடுகின்றது. நாளை மேலும் பல விவரங்களை ஆராய்வோம்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்