நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட பாட்டாளி வர்க்கத்தினர் ஆட்குறைப்புக்கு ஆளாகும் போது முறையான இழப்பீடின்றி நிர்க்கதியாக விடப்படும் சம் பவங்கள் அதிகரித்து வரும் வேளையில் அவர்களுக்கு முறையான இழப்பீடு கிடைப்பதற்கு வகை செய்யும் சிறப்பு காப்புறுதித் திட்டத்தை விரைவில் அமல்படுத்தக்கோரி, பாட்டாளி மக்கள் நேற்று நாடாளு மன்றத்திற்கு வெளியே திரண்டனர். கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் நாடாளுமன்ற கட்டடத்திற்கு வெளியே பல்வேறு பதாகைகளை ஏந்திய வண்ணம் அவர்கள் தங்கள் உள்ளக்கு முறலை வெளிப்படுத்தியது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்தது. முதுமை நிறைந்த இந்த காலக்கட்டத்திலும் தாங்கள் போராட வேண்டி யுள்ளது என்று அவர் தங்கள் வேதனையை தெரிவித்தனர். ஆட்குறைப்புக்கு ஆட்பட்ட தொழிலாளர்களின் நலனுக்காக சிறப்பு காப்புறுதித் திட்டம் விரைவாக அமலுக்கு வர வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஜொகூர், நெகிரி செம்பிலான், பேரா, சிலாங்கூர் ஆகிய நான்கு மாநிலங்களில் ஏறத்தாழ 200 தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் தீராத வேதனையை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர். ஏறத்தாழ இரண்டு மணி நேரம் இவர்கள் கடும் வெயிலில் நின்று ‘வாழ்க தொழிலாளர்கள் தோழர்’ என்று முழக்கம் செய்தனர். இந்தக் காப்புறுதித் திட் டத்தை உடனடியாக அரசாங்கம் அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோஷம் மாறி மாறி எழுந்தது. வேலை இழப்பு கடுமையான விவகாரமாக மாறி வருகிறது. 20,000 கையெழுத்துகள் கொண்ட மகஜர் ஒன்று மனிதவள அமைச்சர் ரிச்சர்ட் ரியோட்டிடம் வழங்கப்படும். 2009ஆம் ஆண்டிலிருந்து அரசாங்கம் சொல்லி வருகிறது. அதாவது சிறப்பு காப்புறுதித் திட்டம் அமலுக்கு வருகிறது. ஆனால் சட்டம் இதுவரை நாடாளுமன்ற தாக்கலுக்கு வரவே இல்லை என பிஎஸ்எம் கட்சியின் தொழிலாளர் பிரிவுத் தலைவர் சிவரஞ்சனி மாணிக்கம் பெருத்த ஏமாற்றத்துடன் தெரிவித்தார். இந்தத் தொழிலாளர் தோழர்களுக்கு பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஒரு முறை அமைச்சர் சொன்னார் சட்டம் வரு கிறது என்று. பிறகு மனிதவள துணையமைச்சர் வாக்குறுதி வழங்கினார். சட்டம் இதோ வருகிறது அதோ வருகிறது என்று தேர்தலுக்காக அரசு சித்து விளையாட்டு விளையாடுவது போல் இருக்கிறது. சில நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டது. 2015ஆம் ஆண்டு 38,000 பேர் தங்களின் வேலையினை இழந்துள்ளனர். கடந்தாண்டு இந்த எண்ணிக்கை 40 ஆயிரமாக ஏறுமுகம் கண்டது. இந்த சட்டம் தாக்கல் செய்யப்படுவதானது அடிக்கடி ஒத்தி வைக்கப்படுவதற்கான காரணம்தான் புரியவில்லை. வேலை இழந்து வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் தொழிலாளர் நிலை படு பரிதாபமானது. பொருளாதார மந்த நிலை காரணமாக 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இவ்வாண்டு வேலை இழப்பர் என்று ஆரூடம் வலம் வருகிறது. பாட்டாளி வர்க்கம் இப்படியே பரிதவிக்க அரசு அனுமதிக்கலாமா?
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்