செய்திகள் கட்டுக்கதையாக மாறக்கூடாது என்பது தான் கவண் திரைப்படத்தின் அடிப் படை கருவாக இருக்கும் என்று அப்படத்தின் நாயகன் விஜய் சேதுபதி நேற்று கூறினார்.இந்தியாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கே.வி. ஆனந்த் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, டி. ராஜேந்தர் நடித்திருக்கும் திரைப்படம் கவண். இவர்களை தவிர்த்து நாயகி மடோனா செபஸ்டியன், விக் ராந்த், ஜெகன், பாண்டியராஜன் உட்பட பல முன்னணி நட்சத் திரங்கள் இத்திரைப்படத்தில் நடித் துள்ளனர். ஹிப்பாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசையமைத் துள்ளார். கவண் திரைப்படத்தை மலேசி யாவில் வெளியீட்டு உரிமத்தை லோட்டஸ் பைவ் ஸ்டார் நிறு வனத்தினர் பெற்றுள்ளனர். அவ்வகையில் இத்திரைப்படம் இன்று நாடு தழுவிய நிலையில் பிரமாண்டமான முறையில் வெளியீடு காணவுள்ளது. கவண் திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு விஜய் சேதுபதி, மடோனா, ஜெகன், ஹிப்பாப் தமிழா ஆதி ஆகியோர் மலேசியாவுக்கு சிறப்பு வருகை மேற்கொண்டனர். நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் இவர்களுடன் லோட் டஸ் குழுமத்தைச் சேர்ந்த டத்தின் கோமதி துரைசிங்கம், இயக்குநர் கருணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கே.வி. ஆனந்த் இயக்கும் திரைப்படங்கள் அனைத்துமே சமூக நலன்களை கொண்ட கதை களமாகவே இருக்கும். சமூக நலன் விஷயத்தோடு காதல், அரசியல், ஆக்ஷன் ஆகியவற்றை கே.வி. ஆனந்த் இணைத்தும் ஒரு படத்தை உருவாக்குவார். அதே போன்று தான் கவண் திரைப்படமும் மக்கள் எதிர் பார்க்கும் அனைத்து அம்சங் களையும் கொண்டதாகும். ஊடக வியலாளர் கள் எதிர்நோக்கும் சவால் களை அடிப்படையாகக் கொண்டு இத் திரைப்படம் இருக்கும். குறிப்பாக செய்திகள் நியாய மான முறையில் இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் அச்செய்தி கட்டுக் கதையாக மாறக்கூடாது என்பதும் இப்படத்தின் கருவாக இருக்கும் என்று விஜய் சேதுபதி கூறினார். கவண் திரைப்படத்தின் வெற் றிக்கு மிக முக்கியமானவராக ஹிப் பாப் தமிழா ஆதி விளங்கு கிறார். அவரின் இசையில் உரு வான பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெறும். அதே வேளையில் அனுபவ கலைஞர் டி. ராஜேந்தரர் இப்படத் தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். அவரின் நடிப்புக்கு இப்படம் மேலும் மணி மகு டத்தை சூடும். இன்று வெளியாகும் கவண் திரைப்படம் அனைத்து வயது ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று விஜய் சேது பதி கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்