புளோரா டாமன்சாரா அடுக்ககத்தின் படிக்கட்டில் கனிம நீர் பெட்டிக்குள் பிறந்த ஆண் சிசு இருந்த சம்பவம் இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே அடுக்ககத்தில் வசித்து வரும் 17 வயது இளம்பெண் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் இச்சிசுவை கண்டுள்ளார். இதன் தொடர்பில் போலீ சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் சானி சே டின் தெரிவித்தார். தன் வீட்டிற்கு படிக்கட்டில் ஏறி செல்லும் போது குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டதாகவும் சத்தம் கேட்ட இடத்திற்கு சென்று பார்க்கையில் அங்கிருந்த கனிம நீர் பெட்டிக்குள் சிசு இருந்ததாகவும் அந்த இளம்பெண் போலீசிடம் தெரிவித்துள்ளார். இந்த அடுக்ககத்தின் 8ஆவது மாடிக்கு இடையிலான படிக் கட்டில் சிசு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கண்டெடுத்த சிசுவை அந்த இளம்பெண் தன் வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். வேலைக்கு சென்றிருந்த தன் தாயாருக்கு இதன் தொடர்பில் தகவல் தெரி வித்துள்ளார். அந்த இளம்பெண்ணின் தாயார் போலீசுக்கு தகவல் அளித்ததாக முகமட் சானி தெரிவித்தார். மருத்துவ சிகிச்சைக்காக சிசு சுங்கை பூலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தற்போது அச்சிசு சீரான நிலையில் உள்ளதாகவும் அவர் சொன்னார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்