கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி சைக்கிள் சவாரியில் ஈடுபட்டிருந்த கும்பலை மோதி எட்டு இளையோர் மரணமடைய காரணமாக இருந்த 22 வயது இளம் பெண் ஒருவர் மீது நேற்று ஜொகூர்பாரு போக்குவரத்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.எனினும் குற்றம் சாட்டப்பட்ட சாம் கே திங் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். மாஜிஸ்திரேட் சலினா ஒமார் சாம் கே திங்கை 10 ஆயிரம் வெள்ளி பிணையில் விடு விக்க அனுமதித்ததோடு வழக்கை ஏப்ரல் 13ஆம் தேதி மீண்டும் செவிமடுக்கவும் விசாரிக்கவும் தேதியை நிர்ணயித்தார். கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி அதிகாலை 3.20 மணிக்கு ஜொகூர்பாரு, ஜாலான் லிங்காராம் டாலாமில் தனது ஜேகியூபி 9984 எனும் வாகனத்தை ஆபத்தான நிலையில் அல்லது கவனமின்றி வாகனத்தை செலுத்தி முகமட் அரிஸ் டானிஸ் பின் சூல்கீப்லி (வயது 14), முகமட் ஷாருல் இஸ்வான் பின் அசுராய் மி (வயது 14), முகமட் பைர்டாவுஸ் டானிஸ் பின் முகமட் அஷான் (வயது 16), பாவ் சான் பின் ஹல்மி ஜான் (வயது 13), முகமட் அஷார் பின் அமிர் (வயது 16), முகமட் ஹரித் இஸ்கண்டார் பின் அப்துல்லா (வயது 14), ஹமாட் பின் கஸ்ரின் (வயது 16) மற்றும் முகமட் ஷாருல் நிசாம் பின் மருஷன் (வயது 14) ஆகியோர் மரண மடைய காரணமாக இருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட் டது. 1987 சாலை போக்குவரத்து சட்டம் 333 பிரிவு 41(1)ன் கீழ் குற்றஞ் சாட்டப்பட்ட சாம் கே திங் குற்றவாளி என கண்டு பிடிக்கப்பட்டால் 10 ஆண்டுகளுக்கு மேற் போகாத சிறைத் தண்டனையும் கூடிய பட்சம் 20 ஆயிரம் வெள்ளி அபராதமும் விதிக்க சட்டம் வகை செய்கின்றது. அதுமட்டுமின்றி அவரது வாகன உரிமமும் பறிக்கப்படும். முன்னதாக சாங் கே திங்கிற்கு எதிராக சீன மொழியில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட வேளையில் அதனை மறுத்து அவர் விசாரணை கோரினார். அர சாங்க தரப்பில் துணை பொது பிராசிகி யூஷன் அதிகாரி ரோஸ்லான் மாட் நூரும் சாங் கே திங்கிற்கு வழக் கறிஞர்கள் பைசால் மொக்தார் மற்றும் புஸ் தாமான் மேனன் ஆகியோர் பிரதிநிதித்தனர். வழக்கறிஞர் பைசால் மொக்தார் சாங் கே திங்கின் வாழ்க்கை சூழ்நிலையை விளக்கியதோடு மாதம் 2 ஆயிரம் வெள்ளி வருமானம் பெறும் குறைந்த தொகையில் பிணையில் விடுவிக்க மாஜிஸ் திரேட்டை கேட்டுக் கொண்டார்.அதுமட்டுமின்றி அவர் ஒரு டத்தோவின் மகள் என ஊடகங்களில் பரப்பப் பட்ட தகவல்களையும் அவர் மறுத்தார்.எனினும் இது பொது மக்களை அதிகம் ஈர்த்த ஒரு விவகாரமாத லால் தேசிய விவகாரமாகவும் விவாதிக்கப்பட்ட வேளையில் கூடியபட்ச பிணைப் பணத்தை விதிக்குமாறு ரோஸ்மாட் நூர் கேட்டுக் கொண்டார். பிப்ரவரி 18இல் நடந்த அந்த சம்பவத்தின்போது சுமார் 30லிருந்து 40 இளையோர் சவாரியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.அவ்விபத்தில் மேலும் எட்டு இளையோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்