கஞ்சா விற்றதற்காக இங்குள்ள உயர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவனுக்கு நீதிபதி தூக்கு தண்டனை விதித்தார். வான் முகமட் லுத்பி (வயது 35) எனும் அந்த ஆடவனுக்கு எதிராகக் குற்றத்தைப் பிராசிகியூஷன் தரப்பு நிரூபித்ததால் இந்தத் தண்டனையை வழங்குவதாக நீதிபதி கூறினார். இத்தண்டனையை எதிர்த்து வான் முகமட் லுத்பி மேல் முறையீடு செய்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன் பாரிட் புந்தாரில் 2.7 கிலோ கிராம் அளவில் கஞ்சா விற்றதாக வான் முகமட் லுத்ப மேல் குற்றஞ்சாட்டப்பட்டது. அபாயகர போதைப்பொருள் சட்டப் பிரிவு 39 (1)(ச்)வின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படிருந்தது. மேலும் ஒரு வழக்கில், கஞ்சா வைத்திருந்ததாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும் 5 பிரம்படி யும் தண்டனையாக விதிக்கப்பட்டன.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்