வங்காள தேசி ஒருவரை சிங்கப்பூரிலிருந்து வாகனத்தில் உட்லண்ட்ஸ் சோதனை சாவடி வழியாக மலேசியாவிற்கு கொண்டு செல்ல முயன்ற குற்றத் திற்காக மூவருக்கு நேற்று சிங்கப்பூர் நீதி மன்றத்தில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிங்கப்பூரில்கூடுதல் நாட்கள் தங்கி விட்ட முகமது இஸ்லாம் முகமது ஹேரிஸ் மட்பார் (வயது 32) என்பவர் சிங்கப்பூர் சட்டத்திலிருந்து தப்பிக்கும் நோக்கில் மூவருக்கும் தண்டனை விதிக்கப்பட்டதை குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் நேற்று உறுதிப்படுத்தியது. அந்த குற்றத்திற்காக முகமது இஸ்லாம் முகமது ஹோரிஸ் மட்பாருக்கு 5 பிரம்படிகளும் 6 மாதச் சிறையும் வழங்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது. மலேசியாவில் பதிவான வாகனத்தில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி மலேசியரான சீ தியென் ஹாவ், அந்த வங்காள தேசியை மறைத்துக் கொண்டு சென்ற போது சோதனை சாவடி அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்டார். சீ தியென் ஹாவ்விற்கு இரு ஆண்டுகள் சிறையும் மூன்று பிரம்படிகளும் தண்டனை யாக வழங்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்