நாட்டின் 14-ஆவது பொதுத்தேர்தலுக்கு மிகப்பெரிய தொகையாக வெ.45 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த பொதுத்தேர்தலுக்கான செலவை விட இது ஒரு சிறிய பகுதி மட்டுமே குறைவாகும். பதின்மூன்றாவது பொதுத்தேர்தலுக்கு வெ.46 கோடி செலவிடப்பட்டது. எனினும், தேர்தல் இவ்வாண்டு நடைபெறுமா அல்லது 2018-லா என்பதை பொறுத்தும் இந்த தொகை அமைந்துள்ளது என்று பிரதமர் துறை துணை அமைச் சர் டத்தோஸ்ரீ ரசாலி இப்ராஹிம் கூறினார்.தேர்தல் ஆணையத்திற்காக 6 கோடியே 27 லட்சம் வெள்ளியையும் அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது என்று அவர் தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவையில் துணை விநியோக மசோதா மீதிலான விவாதத்தின் போது அவர் இதனை தெரிவித்தார். பதிமூன்றாவது பொதுத்தேர்தலுக்கு வெ.46 மில்லியன் செலவானது. பதினான்காவது பொதுத்தேர்தலுக்கு வெ.45 கோடி செலவாகும் என்று மதிப்பிட்டுள் ளோம். ஆனால், தேர்தல் இவ்வாண்டு நடைபெறுமா அல்லது அடுத்த ஆண்டா என்பதை பொறுத்தே இந்த முடிவும் இருக்கும் என்றார் அவர். தேர்தல் ஆணையத்திற்கு வெ.6 கோடியே 27 லட்சத்தை மக்களவை அங்கீகரிக்க வேண்டும். விநியோக மசோதாவில் அரசாங்கம் கோரியுள்ள 308 கோடி வெள்ளியில் இந்த தொகையும் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்