பிகேஆர் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தனது மேல்முறையீட்டிற்காக நீதிமன்றத்தில் தன்னை ஆஜர்படுத்த அனுமதிக்கும் ஓர் உத்தரவை (ஓடிபி) ரத்து செய்யும் பதிவதிகாரியின் முடிவை ஆட்சேபித்து சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுத்துள்ளார்.அன்வாருக்கு வழங்கப்பட்ட ஓடிபி, ஒரு பதி வதிகாரியால் ரத்து செய்யப்பட்டு விட்டதாக கடந்த வெள்ளிக்கிழமை தன் வழக்குரைஞரிடம் தெரிவிக்கப்பட்டதாக அன்வாரின் முன்னணி வழக்கறிஞர் டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீராம் நேற்று செவ்வாய்க்கிழமை நீதிமன்ற நடவடிக்கையின்போது மேல் முறையீட்டு நீதிபதி ரொஹானா யூசோப்பிடம் கூறினார். தனது மேல்முறையீட்டு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராக என் கட்சிக்காரருக்கு அடிப்படை உரிமை இருக்கிறது. ஆகவே பதிவதிகாரியால் வழங்கப்பட்ட நிர்வாக உத்தரவை ரத்து செய்யுமாறு கோரும் ஒரு மனுவை நாங்கள் தாக்கல் செய்யவிருக்கிறோம் என்று கோபால் கூறினார்.அந்த விசார ணையின்போது ஆஜராகும் உரிமை அன்வாருக்கு உண்டா, இல்லையா என்பது தொடர்பான ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க பத்து நாள் அவகாசம் கோரினார். நீதிமன்ற நடவடிக்கைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வாரின் இணை வழக்கறிஞர் லத்தீபா கோயா அன்வாரின் விண்ணப்பத்தை செவி மடுக்க ஏப்ரல் 24ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்து இருக்கிறது என்றார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்