img
img

ஒரு தமிழ்ப்பள்ளிக்கூடம் கட்டுவதற்கு 10 ஆண்டுகளா?
புதன் 29 மார்ச் 2017 13:38:07

img

பங்கோர் தீவின் கடலோரம் கட்டப்பட்டுள்ள தேசிய மாதிரி ஆரம்பத் தமிழ்ப்பள்ளிக்கு மாற்று இடமான நிலத்தை மாநில அரசாங்கம் பணம் போட்டு வாங்கி பத்தாண்டுகள் ஆகியும் அப்பள்ளிக்கு புதிய இடத்தில் புதிய கட்டடம் இன்னும் எழுப்பப்படாதது ஏன் என்று அப்பகுதி வாழ் மக்கள் கேள்வி எழுப் புகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் அப்பள்ளிக்கூடம் 1953-இல் நிர்மாணிக்கப்பட்டது. கடற்கரையோரம், பத்ர காளியம்மன் ஆலயத்தின் அருகே உள்ளது. எனினும், கடல் அருகில் இருப்பதால் அது எழுப்பப்பட்டிருக்கும் நிலம் உப்பு நீரில் அரிக்கப்பட்டு வருகிறது. இதன் அபாயத்தை கருத்தில் கொண்டு, மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காதிர் இப்பள்ளிக்கூடத்திற்கு மாற்று நிலம் அவசியம் என்று ஆலோசனை கூறியிருக் கிறார். 2008-இல் பக்காத்தான் பிடியின் கீழ் மாநில அரசாங்கம் இருந்ததால், மாநில சட்டமன்ற உறுப்பினர் ஏ.சிவநேசன் முயற்சியில் மஞ்சோங் வட் டாரத்தில் ஒரு நிலம் அடையாளம் காணப்பட்டது. ஆனால், 2009-இல் ஏற்பட்ட திடீர் அரசியல் மாற்றத்தின் காரணமாக மாநிலம் மீண்டும் தேசிய முன்னணி வசம் மாறியது. அதன் பிறகு, இத்தமிழ்ப் பள்ளிக்கூட விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியபோது, முன்பு அடையாளம் காணப்பட்ட நிலம் மலையோரம் இருப் பதால் அது சாத்தியமாகாது என்று ஜம்ரி பதில் கூறியிருக்கிறார். அரசாங்கம் ஒரு நிலத்தை அடையாளம் கண்டு தனியாரிடமிருந்து வாங்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். அதன்படி, 2010-இல் நிலமும் வாங்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று வரையில் அங்கு ஒரு செங்கல் கூட நகர்த்தப்படவில்லை. கட்டடம் இப்போது கட்டப்படும், அப்போது கட்டப்படும் என்று கடித பரிமாற்றம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இப்பள்ளிக்கூடத்தை நிர்மாணிப்பதற்காக சுமார் 10 ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.ஆகக்கடைசியாக, 2017 பிப்ரவரி 23-ஆம் தேதியிடப்பட்ட ஒரு கடிதம் வெளியாகியுள்ளது. மஞ்சோங் மாவட்டம், லுமூட் வட்டாரத்தில் சுமார் 1.1643 ஹெக்டர் (2.8771 ஏக்கர்) பரப்பளவிலான நிலம் பெறப்பட்டுள்ளதை இது உறுதிப்படுத்துகிறது. டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் ம.இ.கா. தேசியத் தலைவராக இருந்த போது அப்பள்ளிக்கூடத்தை கட்டுவதற்கான ஒதுக்கீட்டையும் பெற்றுக்கொடுத்துள்ளார். இதை டத்தோஸ்ரீ ஜம்ரியே உறுதிப்படுத்தியிருப்பதாக அறியப்படுகிறது.இன்றையச் சூழலில், பழனிவேல் பதவியில் இல்லை. அந்த இடத்தில் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் இருக்கின்றார். கல்வி துணை அமைச்சராக டத்தோ பி.கமலநாதன் பொறுப்பேற்றிருக்கிறார். இதுவரை நம் இந்திய சமு தாயத்துக்கு இல்லாத ஒரு வாய்ப்பு இந்த கல்வி துணை அமைச்சர் பதவி. ஆனால், அது இருப்பதும், இல்லாததும் ஒன்றுதான் என்று நினைக்கத்தோன்று வதாக பங்கோர் தீவின் இந்தியர்கள் கருத்து கூறுகின்றனர். பங்கோர் தமிழ்ப்பள்ளிக்கூட மாற்று கட்டடத்திற்காக மாநில அரசாங்கம் நிலம் வாங்கியிருப்பதை நாங்கள் வரவேற்கிறோம், நன்றி சொல்கிறோம். ஆனால், இன்று பத்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்னமும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாதது ஏன்? ஒரு தமிழ்ப்பள்ளிக்கூடத்தை கட்டுவதற்கு இவர்களுக்கு என்ன பத்து ஆண்டுகள் வேண்டுமா? இனி எப்போது அதை கட்டி முடிக்கப்போகிறார்கள் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதை மலேசிய நண்பனின் கவனத்திற்கும் அங்குள்ள மக்கள் கொண்டு வந்துள்ளனர். சட்டமன்றத்தில் இது பற்றி கேள்வி எழுப்பப்படும் போதெல்லாம், வேலை நடக்கும், கட்டுவோம், கல்வி அமைச்சிடமிருந்து பதிலுக்காக காத்திருக் கிறோம் என்றுதான் சாக்குப்போக்கு சொல்லப்படுகிறதே தவிர செயலில் ஒன்றையும் காணோம் என்று அவர்கள் தங்கள் மனக்குறையை வெளிப் படுத்தினர். அப்பள்ளிக்கூட மாணவர்களின் கல்வியாற்றல் மிகச்சிறப்பாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தலைமை ஆசிரியர் பாக்கியநாதன் தலைமையில் தங்கள் பிள்ளைகள் திறமைசாலிகளாக இருப்பதை சுட்டிக்காட்டிய பெற்றோர், பள்ளிக்கூடத்திற்கு மாநில அரசாங்கம் உறுதியளித்துள்ளதை போல புதிய நிலத்தில் புதிய கட்டடம் வேண்டும் என குறிப்பிட்டனர். இப்பள்ளிக்கூடத்திற்கு மாற்று இடம் அவசியம் என்பதை உணர்ந்த காரணத்தினால்தான் மாநில அரசாங்கமே இதில் இறங்கி, புதியக் கட்டடம் நிர்மாணிக்கும் முயற்சியை எடுத்தது என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். பழனிவேல் காலத்தில் பள்ளிக்கூட நிர்மாணிப்பிற்கு அரசாங்க நிதி ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்த நிதி என்னவானது? ஆனால் அந்த ஒதுக்கீடு என்னவானது என்பது இன்று வரை தெரியவில்லை. ம.இ.கா. ஏன் இன்னமும் மௌனம் சாதிக்கிறது. கல்வி துணை அமைச்சர் கமலநாதன் வழக்கம் போல இவ்விஷயத்திலும் பேசாதிருப்பாரா என்று அவர்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்புகின்றனர். பங்கோர் தீவில் இந்தியர்கள் பங்கோர் தீவில் தமிழர்களுக்கு அடையாளமாக இருப்பது மூன்றே இடங்கள்தான். ஒன்று பத்ர காளியம்மன் கோயில், மற்றொன்று பங்கோர் தமிழ்ப்பள்ளி, மூன்றாவது இந்துக்களின் இடுகாடு.பங்கோர் தமிழ்ப்பள்ளியும், பத்ரகாளியம்மன் ஆலயமும் பக்கம் பக்கமாக கடலோரம் இருக்கின்றன. அதன் நிலம் தனியார் நிலமாகும். 1953-இல் இருளப்பன் நாடார் என்ற நல்லுள்ளம் படைத்த ஒருவர் அந்த நிலத்தை நன்கொடையாக தந்துள்ளார். இன்று வரை அவரின் பெயரிலேயே அந்த நிலம் பதிவாகியிருப்பதாகவும் அறியப்படுகிறது. இந்த இருளப்பன் நாடார் யார் என்பது யாருக்கும் தெரியாது. ஒரு வாரியத்தை தொடங்கி, நிலத்தை அந்த வாரியத்தின் பெயருக்கு மாற்ற வேண்டும் என்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.பத்ர காளியம்மன் ஆலயத்தின் தலைவராக பங்கோர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன் இருந்திருக்கிறார். அவர் காலத்திலும் எந்த ஒரு அக்கறையும் எடுத்து, இதை மாற்றுவதற்கான முயற்சியில் இறங்கவில்லை. கோயில் நிலம் கூட கோயிலுக்கு சொந்தமானது அல்ல. ஒரு தவணை ராஜசேகரன் அங்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அந்த இடுகாட்டை பொறுத்த வரையில் இன்னமும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலேயே உள்ளது. அதுவும் அங்குள்ள இந்தியர்களுக்குச் சொந்தமில்லை என்று பங்கோர் மக்கள் கூறுகின்றனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
வெ.1 மதிப்புள்ள RFID வில்லைகளை வெ.35 க்கு விற்பது ஏன்? நஜீப் கேள்வி

வாகனமோட்டிகளின் பயன்பாட்டிற்காக தற்போது அறிமுகம் செய்யப்பட்டு வரும்

மேலும்
img
மாணவர்களிடையே பரவுகிறது கோவிட்-19 மேலும் 3 பள்ளிகள் மூடல்

கோவிட்-19 தொற்றுப் பரவல் அண்மைய வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் நாடு

மேலும்
img
எம்.ஏ.சி.சி தலைவரின் விவகாரத்தை மூடி மறைக்க வேண்டாம் பிரதமருக்கு கோபிந்த் அறிவுறுத்தல்

டான்ஸ்ரீ அஸாம் பாக்கி மீதான தனது விசாரணையை தொடர்ந்து மலேசிய பங்கு ஆணையம்

மேலும்
img
வெறும் வெள்ளைச் சோறும் கறியும் போதுமா விசாரிக்கிறது கல்வியமைச்சு

பள்ளியின் கூடுதல் உணவு திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் என்று சமூக

மேலும்
img
ஒருவருக்கு ஒருவர் உதவுவதில் மக்கள்தான் அக்கறை காட்டினர்

அமைச்சர்களுக்கு எல்லாம் ஆயிரக்கணக்கில் சம்பளம் கொடுக்கிறோம். ஆனால் ஒரு

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img