சிறுமி லாரணியா மரணம் குறித்து முழுமையான விசா ரணை நடத்தப்பட வேண்டும் என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ ஹிஷா மிற்கு தாம் பணித் திருப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிர மணியம் நேற்று கூறினார். சிறுமி லாரணியா கடந்த மார்ச் 20-ஆம் தேதி கிள்ளான் பெரிய மருத்துவமனையில் மரணமடைந்தார். மருத்துவமனையின் அலட்சியப் போக்கே இதற்கு காரணம் என்று சிறுமியின் தாயார் பி.பிரேம்ஸ்ரீ கூறினார். அவரின் தாயாரும், உறவினர்களும் மார்ச் 23-ஆம் தேதி தன்னை காண வந்ததாக குறிப்பிட்ட அவர், இவ்விஷயத்தில் தங்களுக்கு உள்ள சந்தேகங் களையும், மனக்குறையையும் பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்தார். மறுநாள் நடைபெற்ற, அமைச்சரவைக்குப் பிந்திய அமைச்சின் உயர் அதிகாரிக ளுடனான சந்திப்பில், இது தொடர்பான விசாரணை எந்தவிதமான ஒளிவு மறைவுமின்றியும் பாரபட்சமின்றியும் நடத்தப்பட வேண்டும் என்று டத்தோ ஹிஷாமிற்கு உத்தரவு பிறப்பித்திருப்பதாக சொன்னார். இச்சம்பவம் தொடர்பில் அமைச்சு நிச்சயமாக மௌனம் சாதிக்கவில்லை. தகுந்த ஆதாரங்களுடன் தொடர் விசாரணை நடத்தப்படும் என்று டாக்டர் சுப்பிரமணியம் மேலும் தனது அறிக்கையில் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்