தாமான் ரிந்திங்கைச் சேர்ந்த முதலாம் வகுப்பு மாணவனின் பிட்டத்தில் பிரம்பைக் கொண்டு கடுமையாக அடித்துக் சூடான பொருளால் சூடு வைத்தும் சித்ரவதை செய்த புறப்பாட ஆசிரியர் ஒருவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஸ்கூடாய் தாமான் துன் அமினாவிலுள்ள அந்த புறப்பாட நிலையத்தில் மூன்று நாட்களுக்கு முன்னர் அந்த புறப்பாட ஆசிரியர் சித்ரவதை செய்ததாகவும் கூறப்பட்டது. தனது வீட்டுப் பாடங்களை முழுமையாக செய்யாததால் சிறுவனின் குடும்பத்தினர் ஆசிரியரின் பொறுப்பில் சிறுவனை விட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக் கிழமை தாமான் பெர்லிங்கிலுள்ள ஆசிரியரின் வீட்டில் சிறுவன் தனியாக இருந்த போது பூட்டப்படாமல் இருந்த முன் கதவு வழியாக வெளியேறிய தோடு பக்கத்து வீட்டுச் சுவரை ஏறி அவர்களின் உதவியை கோரியுள்ளான். அதனை மற்றொரு அண்டை வீட்டுக்காரர் கண்டு சிறுவனின் குடும்பத்திற்கு தகவலை வழங்கியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் முதல் தங்களது தம் பியை அந்த புறடப்பாட மையத்திற்கு அனுப்பி வைத்ததாக சிறுவனின் தமக்கை லிம் போ ஷான் (வயது 23) தெரிவித்தார். கூடுதல் பாடங்களுக்காக சிறுவனை அந்த ஆசிரியர் பாதுகாப்பில் விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தனது தம்பியிடம் குறும்புத் தனம் இருந்தாலும் மதிய வகுப்புகளுக்காகவே அந்த ஆசிரியர் பார்வையில் விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த சனிக் கிழமை சிறுவனை அழைத்துச் செல்ல விரும்பிய போதும் ஆசிரியர் அனுமதிக்கவில்லை என குறிப்பிட்ட அவர், மறுநாள் சிறுவன் சித்ரவதை செய்யப் பட்டுள்ளதை அண்டை வீட்டார் மூலம் அறிந்ததாகவும் தெரிவித்தார். மற்ற ஆசிரியர்கள் துணைப் பாட வகுப்புகளில் இருந்த போது அந்த ஆசிரியர் தனது தம்பியின் பிட்டத்தில் அடித்து காயம் விளைவித்ததோடு சூடு வைத் ததாகவும் தனது தம்பி கூறியதை அவர் நினைவு கூர்ந்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்