இம்மாத தொடக்கத் திலிருந்து ரேலா படையின் 26 துப் பாக்கிகள் மட்டுமே காணாமல் போயின. மாறாக, 44 துப்பாக் கிகள் அல்ல என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் கூறினார். ரேலாவுக்குச் சொந்தமான துப்பாக்கிகளை விற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட ரேலா உறுப் பினர்கள் உட்பட வட பகுதியில் இதுவரை 40 முதல் 60 வயதுக் கும் உட்பட்ட 12 பேரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் அவர் சொன்னார். ஆரம்பத்தில் 44 துப்பாக்கிகள் காணாமல் போனதாக கூறப்பட்டாலும், இதுவரை 26 துப்பாக்கிகள் மட்டுமே காணாமல் போயுள்ளன. காணாமல் போன 26 துப்பாக்கிகளில் 11 துப்பாக்கிகள் மீண்டும் கிடைக்கப் பெற்றன. இது தொடர்பாக 12 தனிநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாங்கூரில் 15 துப்பாக்கிகள் காணாமல் போயுள்ள சம்பவம் தொடர்பாக மேலும் சிலரை நாங்கள் விரைவில் கைது செய்யவுள்ளோம். அந்த துப்பாக்கிகளை யார் வைத்துள்ளனர் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே, சம்பந்தப்பட்ட தரப்பினர்அவற்றை உடனடியாகப் போலீசாரிடம் ஒப் படைத்துவிட வேண்டும்.நேற்று ஆயர் குரோவில் உள்துறை அமைச்சு தினத்தைத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி இதனை தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உள்துறை துணை அமைச்சர் டத்தோ நூர் ஜஸ்லான் முகமட், மலாக்கா மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் ஆகியோரும் கலந்து கொண்டனர். களவுபோன துப்பாக்கிகளை இன்னும் வைத்திருப்பவர்கள் மீது 1971ஆம் ஆண்டு சுடும் ஆயுத சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அவர், அவர்கள் கைது செய்யப்படுவதற்கு முன்பு தங்கள் வசம் உள்ள துப்பாக்கிகளை போலீசாரிடம் ஒப்படைத்தால் அவர்களுக்கு எதிரான தண்டனை குறித்து போலீஸ் பரிசீலிக்கும் என்றார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்