நாட்டில் 39 தமிழ்ப்பள்ளிகளின் புதிய கட்டட கட்டுமானத்தில் பெரும் குளறுபடிகள் நடந்துள்ளன. கட்டுமானப் பணிகளுக்கான காலக்கெடு முடிந்த நிலை யில் பல பள்ளிகளில் கட்டுமானத்திட்டங்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. 2012 ஆம் ஆண்டில் நாட்டின் 13 ஆவது பொதுத் தேர்தலை எதிர் கொள் ளும் வகையில் மலேசிய இந்திய சமூகத்தின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக பிரதமர் துறையின் சிறப்பு நிதி ஒதுக்கீட்டின் வழி (Projek Rancangan Khas 2012 - PRK2012) நாடு தழுவிய நிலையில் செய்யப்பட்ட 39 தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய கட்டடமும், புதிய இணைக் கட்டமும் கட்டுவதற்கு ரிம 78.2 மில்லியன் ஒதுக்கீட்டினையும் அறிவித்திருந்தார். மேலும் வரலாற்றில் முதல் முறையாகத் தமிழ்ப் பள்ளிகளின் கட்டுமானத்தினை மேற்கொள்வதற்கு இந்திய குத்தகையாளர்களுக்கு வாய்ப்பினையும் ஏற்படுத்தியிருந்தார். 2012 இல் ஒதுக்கீடு செய்யப்பட்ட இத்திட்டத்தினை மேற்கொள்ளும் முழுமையான பொறுப்பினை தேர்தலுக்குப் பின்னர் மலேசியக் கல்வி யமைச்சின் துணைக் கல்வியமைச்சராக நியமனம் செய்யப்பட்ட ம.இ.கா.வின் டத்தோ ப.கமலநாதன் ஏற்றுக் கொண்டுள்ளதை நாம் அறிந்திருக்கின்றோம். * 2012 இல் 78.2 மில்லியன் தொகை 2014 இல் ரிம 184.15 மில்லியனாகவும் 2016 இல் இத்தொகை ரிம 216 மில்லியனையும் தாண்டியுள்ளது. * 2017 ஆம் ஆண்டு வரை 39 தமிழ்ப்பள்ளிகளில் ஏறக்குறைய 5 பள்ளிகள் மட்டுமே முழுமையாக நிறைவு பெற்றுள்ளன. * கட்டுமானப் பணிகளுக்கான காலக்கெடு நிறைவு பெற்ற நிலையிலும் மேம்பாட்டுத் திட்டங்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. என்பதை மலேசிய இந்தியர்கள் அனைவரும் அறிந்துள்ளதாகவே நண்பன் குழு கருதுகின்றது. திட்ட மேலாண்மை நிறுவனத்தின் பொறுப்பு என்ன? 2012 ஆம் ஆண்டு சிறப்பு நிதியின் வழி தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமானப் பணிகளை இந்திய குத்தகையாளர்கள் மேற்கொள்வதற்கு ஏதுவாக மலேசியக் கல்வியமைச்சு திட்ட மேலாண்மை ஆலோசக நிறுவனம் ஒன்றிற்கு (Project Management Consultant-PMC) நிதி வழங்கியுள்ளதை நண்பன் குழு அறிந் துள்ளது. * திட்ட மேலாண்மை ஆலோசக நிறுவனமாக இசிஎல் நிறுவனம் கல்வியமைச்சால் நியமனம் செய்யப்பட்டது. * திட்ட மேலாண்மை ஆலோசக நிறுவனத்திற்கு ரிம 4.496 மில்லியன் தொகை வழங்கப்பட்டுள்ளது. * 21.5.2014 தொடங்கி 21.11.2016 ஆம் நாள் வரையிலுமான 17 மாதங்களுக்கு சேவையை வழங்குவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. * ரிம 264,500 ஐ மாதந்தோறும் பெற்று வரும் திட்ட மேலாண்மை நிறுவனம் இன்றுவரை கட்டுமானப் பணிகளை நிறைவு செய்யவில்லை. * திட்ட மேலாண்மை நிறுவனம் கட்டுமானக் குத்தகைகளை இரண்டு பள்ளிகளுக்குப் பெற்றுள்ளதை மறுக்க முடியுமா? தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமானத்தில் பேரளவிளான குளறுபடிகள் நிகழ்ந்துள்ளதா? என்பதை ப.கமலநாதன் விளக்கம் தருவாரா?
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்