பள்ளி ஒன்றில் சுத்தம் செய்யும் தொழிலாளியாக வேலை செய்து வந்தபோது ரசாயன திரவம் கண்ணில் பட்டு தனது வலது கண் பார்வையை இழந்த குடும்ப மாது சொக்சோ இழப்பீடு கோரி கடந்த ஆறு ஆண்டுகளாக நடை யாய் நடந்ததுதான் மிச்சம். இன்னும் இவரது கோரிக்கை நிறைவேற்றப் படவில்லை. 2011ஆம் ஆண்டு பள்ளி ஒன்றில் சுத்தம் செய்யும் பணியிலிருந்த போது ரசாயன திரவம் வலது கண்ணில் பட்டதும் நேராக தனியார் கிளி னிக் சென்று சிகிச்சை பெற்றப் பிறகு ஈப்போ பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். பிறகு துன் உசேன் கண் மருத்துவமனைக்கும், செர்டாங் மருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக அனுப்பினார்கள்.தனியார் மருத்துவமனை யிலும் சிகிச்சை பெற்றும் வலது கண் பார்வை பாதிக்கப்பட்டும் முழுமையாக பார்க்க முடியாத சூழ்நிலையில் வேலை செய்ய முடியாமல் தவித்தேன்.எனக்கு ஆறு பிள்ளைகள். இவர்களை வளர்ப்பதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கினேன். பார்வை பாதிக்கப்பட்ட நிலை யில் சமூக பாதுகாப்பு நிறுவன மான சொக்சோ மூலம் இழப்பீடு பெறுவதற்கு விண்ணப்பம் செய்தேன். என்னுடைய வலது கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது என்று நான் வேலை செய்த நிறுவனம், தனியார் மருத்துவ மனை மருத்துவ அறிக்கை பிறகு அர சாங்க மருத்துவமனை சிகிச்சை அறிக்கை எல்லாவற் றையும் என் மனுவில் சமர்ப்பித் தேன். சொக்சோ மருத்துவ குழு என்னை பரிசோதனை செய் தனர்.ஆனால், இதுவரையில் பதில் எதுவும் தெரிவிக்க வில்லை. கடந்த ஆறு ஆண்டு களாக நடையாய் நடக்கின்றேன் என்று குடும்ப மாது, ரடினா சந் தனசாமி வேதனையுடன் கூறினார். இதனிடையே, இப்பிரச்சினை குறித்து சொக்சோ நிறுவனத்திற்கு தாம் கடிதம் எழுதியிருப்பதாக புந்தோங் சட்ட மன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிர மணியம் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்