உடனடியாக சாப்பிட உதவும் ‘இன்ஸ்டண்ட் மீ, மஞ்சள் மீ மற்றும் பிஸ்பால் (மீன் உருண்டை) ஆகி யவை நமது அன் றாட உணவில் ஒரு பகுதியாக மாறிவரும் நிலையில், அவற்றினுள் இருக்கும் அதிக உப்புத் தன்மையால் ஏற்படும் விளைவுகள் குறித்து உணவியல் துறை நிபுணரான மேரி எசாவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இத்தகைய உணவுகளில் எந்த அளவுக்கு உப்பு கூடுதலாக இருக்கிறது என்பதையும் அதன் பாதிப்புகளையும் பொது மக்கள் அறிந்தே வைத்திருக்க வேண்டும் என்று தேசிய இருதயச் சிகிச்சைக் கழகமான ஐஜேஎன்-ஐ சேர்ந்த நிபுணர் மேரி எசாவ் அறிவுறுத்தி உள்ளார். உடனடி மீ வகைகள், மஞ்சள் மீ, பிஸ்பால் ஆகிய மூன்று உணவு வகைகள் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய உணவாக மாறியுள்ளன. இந்த மூன்றிலும் சோடியம் குளோரைய்ட் எனப் படும் உப்பு அளவுக்கு அதிகமாக உள்ளது. இந்த சோடியம் குளோரைய்ட் வகை உப்பைத்தான் நாம் தினமும் உணவில் சேர்த்து உட்கொண்டுவருகிறோம் என்று அவர் சொன்னார். மேற்கண்ட உணவு வகைகளில் இந்த உப்பின் அளவு கூடுதலாக இருப்பதால் இருதய நோய்ப் பிரச்சினை, இரத்த அழுத்தப் பிரச் சினை ஆகியவற்றுக்கு காரணமாக அமைகிறது என்று அவர் கூறி னார். மீ ஹூன், குவாய்த்தியோ போன்ற மீ வகைகளில் 100 மில்லி கிராம் அளவு மீயிக்கு 6 மில்லி கிராம் உப்பு மட்டுமே இருக்கிறது. ஆனால், உடனடியா மீ வகைகளில் 100 மில்லி கிராம் மீயிக்கு 104 மில்லி கிராம் உப்பு இருக்கிறது என அவர் எச்சரித்தார். நாள் ஒன்றுக்கு பெரியவர்கள் 2,000 மில்லிகிராம் உப்பை உட்கொள்ளலாம் என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது. ஆனால் மலேசியாவில் ஒருவர் ஒரு நாளைக்கு 2,575 மில்லி கிராம் அளவுக்கு உட்கொள்கின்றனர் என அண்மைய ஆய்வு கூறுகிறது என்றார் அவர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்