பண்டார் பூலாய் ஜெயா லாடாங் கெலாப்பா சாவிட்டில் 17 வயது இந்திய இளைஞரை தாக்கி அச்சுறுத்தல் பணம் கேட்டது தொடர்பில் நேற்று முன்தினம் 20 வயதுக்கும் 31 வயதுக்கும் இடைப்பட்ட நால்வரை பண்டார் பாரு கங்கார் பூலாயிலுள்ள பல்வேறு இடங்களில் போலீசார் கைது செய்தனர். நேற்று இங்கு இதனை தெரிவித்த இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் நூர் ஹாஷிம் முகமட் முன்னதாக தனது மகன் தாக்கப்பட்டதால் உடல் முழுவதும் காயங்களுடன் மிகவும் சோர்வாக வீட்டுக்கு வந்ததைத் தொடர்ந்து அவரை மருத்துவமனையில் சேர்த்த பின் அவரின் தாயார் போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டபோலீசார் அந்த நால்வரையும் கைது செய்ததாக குறிப்பிட்ட அவர் அந்த இளை ஞரை அந்த கும்பல் கங்கார் பூலாயிலிருந்து லாடாங் கெலாப்பா சாவிட்டிற்கு கொண்டு சென்று தாக்கி 5 ஆயிரம் வெள்ளியை கேட்டு மிரட்டியதாகவும் குறிப்பிட்டார். கடந்த மார்ச் 23 ஆம் தேதி அத்தாக்குதல் நடைபெற்றதாக குறிப்பிட்ட அவர் அக்கும்பலிடமிருந்து கை தொலைபேசிகளை போலீசார் கைப்பற்றியதோடு குற்றவியல் பிரிவு 326, 385 இன் கீழ் நால்வரிடமும் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். இதனிடையே மின்சார கம்பி வடங்களை திருடியதற்காக 16, 21 வயதுடைய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 19 ஆம் தேதி இஸ்கண்டார் புத்ரி ஜாலான் இஸ்கண்டார் புத்ரி 1/2 லுள்ள ஆறு கடைகளில் மின் சாரத்தைத் துண்டித்து மின்சார கம்பிவடங்களை யும் கொள்ளையிட்டு சென்றதன் தொடர்பில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி அவ்விருவரும் பிடிபட்டதாகவும் நூர் ஹாஷிம் முகமட் குறிப்பிட்டார். அவ் விருவரும் விசாரணைக்காக இன்று வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்