கட்டுப்பாட்டை இழந்த லோரி வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 451ஆவது கிலோ மீட்டரிலுள்ள பள்ளத்தில் குடை சாய்ந்ததில் அதன் ஓட்டுநர் உயிரி ழந்தார்.அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், கட்டுப்பாட்டை இழந்த லோரி சாலையின் இடது புறத்திலுள்ள தடுப்புச் சுவரை மோதியதுடன் 7 மீட்டர் ஆழம் கொண்ட பள்ளத்தில் தடம் புரண்டுள்ளது. மோசமான சேதாரத்திற்கு ஆளான லோரியின் இருக்கையில் சிக்கிக் கொண்ட ஓட்டுநர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்புப் படையின் பேச்சாளர் தெரிவித்தார். அங்கு விரைந்த சுங்கை பூலோ தீயணைப்புப் படையினர் பள்ளத்திலிருந்து உயிரிழந்தவரின் சடலத்தை மேலே கொண்டு வந்தனர். பிரேதப் பரிசோதனைக்காக சடலம் சுங்கை பூலோ பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவர் சொன்னார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்