தாமான் புக்கிட் இண்டாவிலுள்ள பேரங்காடியிலிருந்து மொத்தம் ஆயிரத்து 300 வெள்ளி மதிப்பு கொண்ட பொருட்களை கொள்ளையிட்டதன் தொடர்பில் தாயும் மகளையும் விசாரணைக்காக போலீசார் தடுத்துள்ளனர். நேற்று இங்கு இதனை தெரிவித்த இஸ்கண்டார் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண் டெண்டன் நூர் ஹாஷிம் முகமட் கடந்த 25 ஆம் தேதி பிற்பகல் 1 மணியளவில் இயோன் (AEON) எனும் அந்த பேரங்காடியில் 58 வயது தாயும் 30 வயது மகளும் 55 விதமான பொருட்களை கொள்ளையிட்டு வெளியேறும் போது இருவரையும் பாதுகாப்பு அதிகாரிகள் தடுத் ததாக குறிப்பிட்ட அவர் அச் சம்பவம் குறித்து மாலை 5.30 மணிக்கு போலீசுக்கு தகவல் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். அந்த இரு பெண்களும் கொள்ளையிட்ட பொருட்களை பிளாஸ்டிக் பையில் வைத்து டுரோலி மூலம் பேரங்காடியை விட்டு வெளியேறும் போது பிடி பட்ட தாக தெரிவித்த நூர் ஹாஷிம் முகமட் சமையல் எண்ணெய், உடுப்புகள், அரிசி மூட்டைகள் போன்றவையும் கொள்ளையிட்ட பொருட்களில் அடங்கும் என தெரிவித்தார். இருவரும் பத்துபகாட்டைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிட்ட அவர் தங்களது குற்றத்தை அவர்கள் ஒப்புக் கொண்டதாகவும் தெரிவி த்தார். கைது செய்யப்பட்ட இருவரில் 30 வயது பெண்ணுக்கு 9 மாத குழந்தை உட்பட மூன்று பிள்ளைகள் இருப்பதாக தெரிவித்த அவர் இருவரும் குற்றவியல் பிரிவு 38 இன் கீழ் விசாரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்