குடியிருப்பில் கடுமையான மழை புயல் காற்றில் சிக்கிய 50 க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரை ஓடுகள் பறந்ததில் மழையில் பொருட்களும் சேதமடைந் ததுடன் மரங்களும் வீட்டின் மீது விழுந்து பாதிப்புக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது. நேற்று மாலை 3 மணியளவில் செனவாங், தாமான் ஸ்ரீ மாவாட் குடியிருப்பில் கடுமையான மழை புயல்காற்றில் 50 இந்திய குடும்பங்களும், சீனர், மலாய்க்காரர் குடும்பங்களும் பாதிப்புக்குள்ளானதாக கூறப்பட்டது. வீட்டின் கூரைகள் திடீரென பறந்ததால் கனத்த மழையில் வீட்டில் இருக்கும் பல ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள தளவாடப் பொருட்களும் தொலைக்காட்சி உட்பட மின்சாரப் பொருட்களும் நனைந்து சேதமடைந்ததாக இக்குடியிருப்பில் வசிக்கும் மாநில ஐபிஎப் கட்சியின் உதவித் தலைவர் எ.குணசேகரன் விளக் கினார். தகவல் கிடைத்ததும் விரைந்த இத்தொகுதியைச் சேர்ந்த தேசிய முன்னணியின் பிரதிநிதி வந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வீட்டின் கூரைகள் உடனடியாக சீரமைத்துக் கொடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் என உறுதி கொடுத்து இருப்பதாக அவர் சொன்னார். இச்சம்பவத்தில் பலதரப்பட்ட இழப்புகளை எதிர் நோக்கியுள்ள குடும்பங்களுக்கு மாநில அரசிடமிருந்து உதவி நிதி பெற்றுத் தருவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று எ.குணசேகரன் குறிப்பிட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்