இந்திய மகளிரிடையே தொழில் முனைவர்களை உருவாக்கும் நோக்கில் மலேசிய நண்பன் முதல்முறையாக நேற்று மகளிர் வர்த்தக கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்தியது. மலேசிய நண்பன் நிர்வாக இயக்குநர் டத்தோ ஷாபி ஜமான் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டனர். இந்தியர்கள் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக எந்தவிதமான பிரதி பலனும் எதிர்பார்க்காமல் இதுபோன்ற வர்த்தகக் கருத்தரங்குகளை மலேசிய நண்பன் ஏற்பாடு செய்து வருவதாக அதன் நிர்வாக இயக்குநர் டத்தோ ஷாபி ஜமான் தெரிவித்தார். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வயதான மனிதரை நான் சந்தித்தேன். அவர் என்னை பார்த்து வியாபாரம் என்றால் என்ன என்று ஒரு கேள்வியைக் கேட்டார். வியாபாரம் என்றால் என்ன....விற்பது வாங்குவது என்று நான் பதில் சொன்னேன்.அதற்கு அவர் இல்லப்பா, வியாபாரம் என்றால் பூ என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. வியாபாரம் என்பது சிந்திப்பு, சிரிப்பு, சந்திப்பு, நட்பு என்று அவர் விவரித்தார். இந்த பூக்கள் இருந்தால் மட்டுமே ஒருவர் சிறந்த வியாபாரியாக முடியும் என்று அவர் என்னிடம் தெரிவித்தார். அவர் சொன்னது வேத வாக்கு. வியாபாரத்தில் என்னுடைய அனுபவம் ஒன்றுதான். வியாபாரம் செய்வதற்கு முதலில் ஆர்வம் வர வேண்டும். காசு தேட வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். எதற்கு வியாபாரம் செய்யப்போகிறோம் என்பது தெரியாமலேயே நீங்கள் வியாபாரத்தில் ஈடுபட்டால் நிச்சயம் வெற்றி பெற முடி யாது. ஆகவே, நீங்கள் வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு முன்பு முதலில் அதன் மீது உங்களுக்கு ஆர்வம் ஏற்பட வேண்டும். ஓர் இலக்கை நீங்கள் உரு வாக் கிக் கொள்வது அவசியம். வாழ்வில் முன்னேற வேண்டும், நல்ல கார், வீடு வாங்க வேண்டும், சிறப்பாக குடும்பத்தை நடத்த வேண்டும், பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும், நானே சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆசை மனதில் முதலில் உருவாக வேண்டும். இந்த எண்ணம் இருந்தால் மட்டுமே வர்த்தகத்தில் வளர முடியும். வாழ்க்கைப் பாடங்களில் ஒன்று வழிகாட்டல். உங்கள் பிள்ளைகளுக்கு முதலில் நீங்கள் இதனை உணர்த்த வேண்டும். வாழ்வில் உங்களால் சாதிக்க முடி யாததை உங்கள் பிள்ளைகள் சாதிக்க பெற்றோர்களாகிய நீங்கள்தான் வழிகாட்டியாக இருக்க வேண்டும். வியாபாரம் என்பது நமக்கு அடிப்படை தேவை. நீங்கள் ஒரு முதலாளியாக வேண்டுமா அல்லது தொழிலாளியாக வேண்டுமா? என்ற தேர்வு உங்கள் கையில்தான் உள்ளது. இங்கு வந்திருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் முதலாளியாக வேண்டும் என்று டத்தோ ஷாபி வலியுறுத்தினார். மாற்றி யோசிப்போம் - எஸ்.கே.சுந்தரம் இந்நிகழ்ச்சியில் எண்ட்ரிகோஸ் மலேசிய நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.கே.சுந்தரம், வெற்றிகரமான வியாபாரத்தை உருவாக்கி, அதனை நிலை நிறுத்தும் வழி வகைகளை பகிர்ந்து கொண்டார். இவர் தனது உரையில் மாற்றி யோசிக்கும் யுக்திகளை பற்றி விவரித்தார். பல ஆண்டுகள் நாம் மீன் கறி சமைக்கிறோம். அதில் வெந்தயத்தை சேர்க்கிறோம். ஆனால், அதில் ஏன் வெந்தயம் சேர்க்கிறோம் என்று எப்போதாவது நாம் சிந்தித்தது உண்டா? அதையே மாற்றி யோசித்த ஒருவர் அந்த வெந்தயத்தை பவுடராக்கி, அதன் மகிமைகளை எடுத்துச் சொல்லி, அதையே வியாபாரம் ஆக்கினார். கருவேப்பிலையும் அப்படித்தான். சாதம் உட்கொள்ளும்போது கருவேப்பிலையை ஒதுக்கி வைத்து விடுகிறோம். ஆனால், அதுதான் கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது என்று சொல்லி அதையும் மருந்தாக்கி விற்பனை செய்கிறார்கள். இவை மிகவும் எளிதான வழிகள், ஆனால் சிறந்த விற்பனை யுக்திகள். சாதா ரண விஷயங்களை கற்றுக்கொண்டு, அவற்றை எப்படி வர்த்தகமாக்க முடியும் என்பதை ஆராயுங்கள் என்று கருத்தரங்கில் கலந்து கொண்ட மகளிருக்கு சுந்தரம் வலியுறுத்தினார். ஒரு வியாபாரத்தில் ஈடுபவதற்கோ அல்லது ஒரே வணிகரை அல்லது வர்த்தகத்தை நீங்கள் தேர்வு செய்வதற்கோ காரணம் இருக்க வேண்டும். நாம் அடிக்கடி ஒரே இடத்திற்கு செல்வதற்கும், அல்லது ஒரே மாதிரியான பொருளையோ, சேவையையோ பயன்படுத்துவதற்கும் ஒரு காரணம் இருக்கவே செய்யும். அதில் ஏதோ சிறப்பு இருக்கிறது. ஒரு பொருளை ஒப்பிட்டு, அதை விட சிறப்பான ஒன்றை வழங்குவது பற்றி யோசிக்க வேண்டும். அப்போது தான் வாடிக்கையாளர்களை நாம் ஈர்க்க முடியும், அவர்களை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று அவர் தனது உரையில் மேலும் கூறினார். நேரடி விற்பனை துறை - சிவா நேரடி விற்பனை துறையை தேர்வு செய்வது எப்படி? என்ற தலைப்பில் கோலாலம்பூர், சிலாங்கூர் இண்டலெக் சஹாயாவின் தலைவர் எம்.சிவா தகவல் களை பகிர்ந்து கொண்டார். நேரடி விற்பனையில் நிலவக்கூடிய மோசடிகளை எவ்வாறு அடையாளம் காண முடியும் என்ற விவரங்கள் மகளிருக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தன. வாழ்க்கையில் நாம் கடந்து வந்த பாதையில் திரும்ப போக முடியுமா? என் தவறுகளை சரி செய்து விடுவேன் என்று நினைத்தால் முடியுமா? அப் படித்தான் வியாபாரமும். தவறு செய்து விட்டால் போட்டதை திரும்பப் பெற முடியாது. குறிப்பிட்ட ஒரு தொகையை போட்டால் இவ்வளவு லாபம் கிடைக்கும் என்று சொல்வதை கேட்டு எப்படி நீங்கள் உங்கள் பணத்தை முதலீடு செய்ய முடியும்? இணையத் தளத்தில் இன்று இம்மாதிரியான மோசடிதான் தலைதூக்கியுள்ளது. பணத்தை போட்டு விட்டு, அதை இழந்து, போலீசில் புகார் செய்தால் கூட ஒன்றும் ஆகப்போவதில்லை. யாரை கேட்டு பணம் போட்டீர்கள் என்றுதான் போலீசும் உங்களை பார்த்து கேட்கும். நிறுவனத்தை பற்றி ஒன்றுமே தெரியாமல் எப்படி ஒரு பெரிய தொகையை முதலீடு செய்ய முடியும்? நம் மக்களுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது என்று கூட நாம் யோசிக்கத் தோன்றுகிறது. வட்டிக்கு பணம் வாங்கி கூட சிலர் இம்மாதிரி முதலீடு செய்கின்றனர். இறுதியில் இரண்டையும் இழந்து, வீணாகக் கடன் கட்ட வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர். ஆகவே, இதுபோன்ற விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக செயல் படுவதன் அவசியத்தை சிவா தனது உரையில் வலியுறுத்தினார். அபாங் அபு மெக்கானிக் வாங் ஒரு வித்தியாசமான தன் முனைப்பு பேச்சாளர் ‘அபாங் அபு மெக்கானிக் வாங்’. பண மெக்கானிக் என்பதே இதன் நேரடி அர்த்தமாகும். இவர் சிங்கப்பூரில் மிகவும் பிரபல மானவர். மலேசியாவில் குறிப் பாக, மலாய்க்காரர்கள் மத்தியில் இதுவரை தனது பேச்சாற்றலால் பலரையும் கவர்ந்த இவர் நேற்று முதல் முறையாக மலேசிய நண்பன் மகளிர் கருத்தரங்கில் தமிழில் மிகவும் சுவாரஸ்யமாக தனது தன்முனைப்பு உரையை நிகழ்த்தினார். ஒரு மணி நேரம் போனதே தெரியாமல் பணம் சம்பாதிக்கும் ரகசியங்களை இவர் பகிர்ந்து கொண்டார். ஒரு மெக்கானிக் உடை யிலேயே இவர் இந் நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு, ஆக்ககரமாக பங்கெடுத்த மகளிருக்கு ஒரு மெக்கானிக் பயன்படுத்தும் ஸ்பானர், ஸ்க்ரூ டிரைவர், கோடரி போன்ற வற்றை அடையாளச் சின்ன வடிவில் பரிசாக கொடுத்து அசத்தினார். சேமிப்பின் அவசியத்தை இவர் தனது உரையில் உணர்த்தினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்