திடீரென பெய்த கடும் மழையால் செனாய் தாமான் அமான் குடியிருப்புப் பகுதியிலுள்ள வீடுகளில் வெள்ளம் ஏற்பட்டு வீட்டிலுள்ள பல பொருட்கள் சேத மடைந்ததாக அங்கு குடியிருக்கும் கூலாய் ம.இ.கா. தொகுதியின் மகளிர் பிரிவு தலைவி சந்திரலேகா முனியன் கூறினார். குடியிருப்புப் பகுதியிலுள்ள கால்வாய்களில் குப்பைகளும் மண்ணும் புல்லும் தேங்கி கிடப்பதில், வெள்ளம் பெருக்கெடுத்து வீடுகளில் நுழைவதாக அவர் சொன்னார். கடந்த ஒரு வருடமாக, கூலாய் மாவட்ட நகராண்மைக்கழகத்தில்கால்வாய் பற்றி புகார் செய்தும் அதனை சுத்தப்படுத்தும்படி கேட்டுக் கொண்டும், நகராண் மைக்கழகம் மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருவதாக அவர் கூறினார். கூலாய் நகராண்மைக்கழகம் இந்த வெள்ளப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாண வேண்டும் என்று பத்து வருடத்திற்கும் மேலாக குடியிருக்கும் குணாளன் (வயது 44) தெரிவித்தார். திடீரென பெய்த மழையால் அருகிலுள்ள கால்வாயில் மழைத்தண்ணீர் நிறைந்து வீட்டுக்குள் வந்து விட்டதாக கூறிய அவர் வீட்டிலுள்ள பல பொருட்கள் சேதம் அடைந்து விட்டதாகவும் அவர் சொன்னார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்