img
img

2016 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சீனப்பள்ளிகளுக்கு 5 கோடி !
ஞாயிறு 26 மார்ச் 2017 11:29:22

img

2016 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சீனப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட 5 கோடி வெள்ளியை சீன சமூகத்தை பிரதிநிதிக்கும் ம.சீ.ச. ஒரு வெள்ளிகூட சேதாரம் இல்லாமல் முழுமையாக அரசாங்கத்திடமிருந்து போராடி பெற்று இருக்கும் போது, தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட அதே 5 கோடி வெள்ளியை போராடி பெற முடியாமல் மஇகா பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்து, ஒரு கோடியே 65 லட்சம் வெள்ளியை மட்டும் பெற்றுக்கொண்டு, கோட்டை விட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. மலேசியாவில் வாழும் மலேசிய இந்தியர்களின் அடிப் படை உரிமைகளில் ஒன்றான தமிழ்ப்பள்ளிகளுக்கு இந்த 60 ஆண்டு கால சுதந்திரத்திற்கு பிறகும் விடியல் கிடையாது என்பதை ஏவுகணை தொடர்ந்து சுட்டிக்காட்டி வந் தாலும், எதையுமே மாற்ற முடி யாத அவலங்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் பல்வேறு சவால்களைத் தமிழ்ப்பள்ளிகள் எதிர்கொண்டிருப்பதற்கு யாராலும் தீர்வுகாண முடி யாதா? என்ற சந்தேகம் மேலும் வலுத்துள்ளது. 2009-ஆம் ஆண்டு தொடங்கி 2016-ஆம் ஆண்டு வரை, பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தமிழ்ப் பள்ளிகளின் மீது கொண்டுள்ள அக்கறை யின் காரணமாக, மலேசிய இந்தியர்களின் நலன்களை முன்வைத்து தமிழ்ப்பள்ளி களுக்கென சுமார் வெ. 760 மில்லியன் (வெ.76 கோடி) தொகையினை ஒதுக்கீடு செய் திருந்தார். இதை யாராலும் மறுக்க முடியாது. எனினும், ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் வெ.70 கோடி தொகைக்கு ஏற்ற வாறான உருமாற்றம் தமிழ்ப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கான பதிலைப் பெறுவதில் ஏவுகணை மிகப் பெரிய தோல்வியையே சந்தித் துள்ளது. தமிழ்ப்பள்ளிகளின் காவலன் என கூறிக் கொண்டிருக்கும் மஇகாவின் செயல்பாடுகள் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஐயத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. இதையும் யாராலும் மறுக்க முடியாது! மலேசியக் கல்வியமைச்சின் வழி ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆண்டு பட்ஜெட் டின் வழி அறிவிக்கப்படும் வெ. 100 மில்லியன் தொகை கடந்த சில ஆண்டுகளாக வெ. 50 மில்லியனாகக் குறைக்கப்பட்ட தற்கு வீரியமான மஇகாவின் தலைமைத்துவம் கேள்வி எழுப்பியதா? இந்த கேள்விக்கு நிச்சயமாகப் பதில் கிடைக்காது என்பது திண்ணம். 2016-இல் வழங்கப்பட்ட தொகை என்ன? மலேசியாவில் சிறுபான்மை இனத்தவராகவும், சமூகப் பொரு ளாதார நிலையில் மிகவும் பின் தங்கிய சமூகமாகவும், நலிவுற்ற சமூகமாகவும் உருமாற்றம் கண்டி ருக்கும் சமூகத்தின் தாய் மொழி உரிமையைப் பேணுவதற்கு 524 தமிழ்ப்பள்ளிகள் நாடு தழுவிய நிலையில் இருந்தாலும், அப்பள் ளிகளின் மேம்பாட்டிற்காக வழங் கப்படும் (ஒரே மானியம்) ரிம. 50 மில்லியன் தொகை எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படு கின்றது என்பதை யாராவது கூற முடியுமா? 524 தமிழ்ப்பள்ளிகளுக்காக ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வரும் மானியத்தின் பயன்பாடு சரியாக இருந்திருந்தால் தமிழ்ப் பள்ளிகளின் இன்றைய நிலை வேறுபட்டே இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. * தமிழ்ப் பள்ளிகளின் கட்டு மானம் பேரளவில் முடிவு பெறாமல் இருந்து வருகின்றன. * தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியங்கள் முழுமையான பயனை ஏற்படுத்தவில்லை. * தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியங்கள் அரசியல் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப் படுகின்றன. * மாதிரி காசோலை வழங்கும் வைபவங்களை தமிழ்ப்பள்ளிகள் எதிர்கொண்டுள்ளன. * வாக்குறுதியளித்தபடி மீத முள்ள 6 புதிய தமிழ்ப்பள்ளி களின் கட்டுமானம் கேள்விக்குறி யாகி உள்ளது. * ரிம. 216 மில்லியனைத் தாண்டியுள்ள 39 தமிழ்ப் பள்ளிகளின் கட்டுமானங்கள் பல்வேறு சிக்கல்களை எதிர் நோக்கியுள்ளன. * 176 அரசாங்கத் தமிழ்ப் பள்ளிகள் (Sekolah Kerajaan) மானியங்கள் அறவே இல்லாமல் அல்லாடுகின்றன. மேற்கண்ட இன்னல்களுக்கு எல்லாம் மேன்மையாக 2016ஆம் ஆண்டிற்கான மானியத் தொகை ரிம.50 மில்லியன் (வெ.5 கோடி) தமிழ்ப்பள்ளி களுக்கு முழுமையாக வழங்கப்படவில் லையா? என்ற கேள் விக்கு யாராவது பதில் தருவார் களா? தமிழ்ப்பள்ளி மானியம் ரிம.16.5 மில்லியன் மட்டும்தானா? 23.12.2016இல் வெளியான தி சன் நாளிதழின் வழி Budget for Chinese schools already given (சீனப்பள்ளிகளுக்கான ஒதுக்கீடு வழங்கப்பட்டுவிட்டது) எனும் தலைப்பிலான செய்தியின் வழி சீன நாளிதழான சின் சியூ (Chin Siew Daily)க்கு வழங்கிய பதி வின் வழி இரண்டாவது நிதி யமைச்சர் டத்தோ ஜோஹாரி அப்துல் கனி (Dato Johari Abdul Ghani) சீனப் பள்ளிகள் 2016ஆம் ஆண்டுக்குள் வாக் குறுதியளிக்கப்பட்டபடி ரிம. 50 மில்லியன் தொகை யினைப் பெறுவர் என அறிவித்திருந்தார். அதற்கு முன்னதாக மலேசிய சீனர் சங்கத்தின் முடிவின்படி ரிம. 50 மில்லியன் தொகைக்கு குறை வான எந்தத் தொகையையும் ம.சீ.ச. ஏற்றுக் கொள்ளாது எனத் திட்டவட்டமாக மலே சியக் கல்வியமைச்சின் துணைக் கல்வியமைச்சர் சோங் சின் வூன் (Chong Sin Woon) கூறியுள்ளதையும் தெரி வித்திருந்த அச்செய்தியில் தமிழ்ப்பள்ளிகள் ரிம.16.5 மில்லி யன் (1 கோடியே 65 லட்சம்) தொகையினைப் பெறு வதற்குச் சம்மதித்துள்ளதாகவும் கூறியுள்ள விவகாரத்திற்கு யாராவது பதில் தருவார்களா? 2016இல் தமிழ்ப் பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரிம. 50 மில்லியன் மானியத்திற்குப் பதி லாக ரிம. 16.5 மில்லியன் தொகையினை மட்டுமே பெற் றுக் கொள்வதற்கு; * ம.இ.கா.வின் தேசியத் தலைவர் * ம.இ.கா.வின் மத்திய செயலவை * ம.இ.காவின் கல்விக் குழு * ம.இ.காவின் தலைவர்கள் * கல்வியமைச்சின் துணைக் கல்வியமைச்சர் டத்தோ ப.கமலநாதன் ஆகி யோரில் யார் முடிவெடுத்தது? என்பதற்கு ஏவுகணை பதிலைத் தேடுகின்றது! சீனப் பள்ளிகளின் தேவை களை நிறைவு செய்வதற்கும் பிடிவாதமாகவும் உரிமையோ டும் ரிம.50 மில்லியனுக்குக் குறையாமல் பெறுவதற்கு சீனச் சமூகமே குரல் கொடுத்து உரிமையை பெற்றிருக்கும் நிலையில் மிகவும் நலிவுற்றி ருக்கும் தமிழ்ப் பள்ளிகளின் தொடர்பில் உரிமைக் குரல் எழுப்பாமலும் இந்திய சமூகத் திற்குத் தெரியாமலும் ரிம.16.5 மில்லியனை மட்டுமே பெற் றுக் கொண்டது உண்மையானால், மலேசிய இந்திய சமூகத் திற்கும் தமிழ்ப் பள்ளிகளுக்கும் இழைக்கப்பட்டிருக்கும் துரோக மாகவே கருத வேண்டியிருப்ப தாக அறிய வேண்டியுள்ளது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img