இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் குடும்ப நண்பரின் விருந்தோம்பலில் கலந்து கொள்ளவும் இலங்கைத் தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழாவில் பங்கேற்கவும் இருந்த நடிகர் ரஜினிகாந்த் இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக நேற்று அறிவித்துள்ளார். இலங்கை செல்வதற்கும் அங்கு ராஜபக்சே மற்றும் அவரின் குடும்ப நண்பரின் விருந்தில் ரஜினி கலந்து கொள்வதற்கும் கடுமையான எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து நேற்று மாலை யில் அதிரடியாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். தமிழக மக்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று நான் இவ்விழாவில் கலந்து கொள்வதை தவிர்க்கிறேன் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை லைக்கா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. அதனை நடிகர் ரஜினிகாந்த் மூலம் வழங்க உள்ளதாக லைக்கா அறிவித்தது. இதற்காக ஏப்ரல் 9, 10 ஆகிய தேதிகளில் ரஜினி இலங்கை செல்வதாக இருந்தார். ஆனால் ரஜினியின் இந்த பயணத்துக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் இலங்கையிலும் கூட பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவி வருகின்றன. கார ணம், லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் ராஜபக்சேவின் குடும்ப நண்பர் ஆவார். அத்துடன் அவர் ரஜினிக்கு விருந்து ஒன்றையும் கொடுக்க திட்ட மிட்டு இருந்தார். அந்த விருந்தில் ராஜபக்சேவும் கலந்து கொள்ளவிருந்தார். ரஜினி அரசியலில் சிக்க வேண்டாம். அவர் இலங்கை செல்லக் கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார். இலங்கைத் தமிழர்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்து இனவாதப் போரை நடத்திய இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் குடும்பத்தினருக்கு மிகவும் வேண்டியவரின் வீட்டில் ரஜினி கலந்து கொள்ளக்கூடாது என்றும் திருமாவளவன் வலியுறுத்தியிருந்தார். தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், ரஜினிகாந்த் இலங்கைக்கு செல்ல வேண்டாம் என கோரியிருந்தார். இதையடுத்து இவர்களின் கோரிக்கையை ஏற்று தனது இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:- நான் அரசியல்வாதி அல்ல. மக்களை மகிழ்விக்கும் கலைஞன். இலங்கை செல்ல மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால், அதை அரசியலாக்கி தடுத்து விடாதீர்கள். புனிதப் போர் நிகழ்ந்த பூமியை காணும் பாக்கியம் மீண்டும் கிடைத்தால் தடுக்காதீர்கள். வைகோ தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். திருமாவளவன் ஊடகம் மூலம் தெரிவித்தார். இவர்களின் கோரிக்கைகளை ஏற்று தற்போது இந்த பயணத்தை ரத்து செய்துள்ளேன். பல அரசியல் காரணங்களை முன்வைத்து இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளக்கூடாது என்று அன்புடன் கேட்டுக்கொண்டார்கள். அவர்கள் சொன்ன காரணங்களை முழுமனதுடன் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் அவர்களுடைய அன்பு வேண்டுகோளை ஏற்று நான் இவ்விழாவில் கலந்து கொள்வதை தவிர்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்