img
img

51 ஆண்டு அரசியல் வாழ்வில் ஓய்வு பெறப் போகிறேன்!
ஞாயிறு 26 மார்ச் 2017 11:01:21

img

நாட்டின் 14 -ஆவது பொதுத் தேர்தலில் தான் போட்டியிடுவது உறுதியானால், தனது கேலாங் பாத்தா தொகுதியையே தற்காத்து போட்டியிட விருப் பதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜ.செ.க. ஆலோசக ருமான லிம் கிட் சியாங் கூறினார்.கடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு, கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதி மக்களை அவர் புறக்கணித்து வருவதாக பேசப்படும் சூழலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். கேலாங் பாத்தா தொகுதிக்கு தாம் முக்கியத்துவம் அளித்தாலும், கட்சிக்கான வெற்றி வியூகங்களை கருத்தில் கொண்டு புதிய தொகுதியில் போட்டி யிடுவது பற்றியும் பரிசீலனை செய்வதாக அவர் சொன்னார். எனினும், 1966-ஆம் ஆண்டில் ஜ.செ.க. தோற்றுவிக்கப்பட்டது முதல் 51 ஆண்டுகள் மலே சிய அரசியலில் நான் போராட்டம் நடத்தி வருகிறேன். இப்போது எனக்கு 76 வயது. அரசியலிலிருந்து ஓய்வுப்பெறலாமா என்றும் யோசித்து வருகிறேன் என்றார் அவர். அப்படியே 14-ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட்டாலும் கேலாங் பாத்தா தொகுதியே என் முதல் தேர்வாக இருக்கும் எனவும் அவர் சொன்னார். இதனிடையே, கேலாங் பாத்தா தொகுதி மக்களை தாம் புறக்கணிப்பதாகக் கூறப்படுவதை கிட் சியாங் மறுத்தார். ‘அங்கிள் லிம் கிட் சியாங் எங்கே’ என் றும் ‘கேலாங் பாத்தாவில் உங்களைக் காணவில்லை’ என்றும் கேலாங் பாத்தா தொகுதியில் பதாகைகள் போடப்பட்டிருப்பதை குறிப்பிட்ட அவர் ‘நான் இங்கேதான் இருக்கிறேன்; என்று பதிலுக்கு கூறினார். துன் டாக்டர் மகாதீர் முகமட் தலைமையில் மலேசியாவைக் காப்பாற்றும் இயக்கம் தேசிய அள வில் நடைபெறுவதால் அதிலும் தான் கலந்து கொள்ள வேண்டியிருப்பதாக என அவர் சொன்னார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img