நாட்டில் நிகழும் ஆலய உடைப்பு, சிலைகள் தகர்ப்பு ஆகிய சம்பவங்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா? புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைவர் டத்தோ அயூப் கான் மைடின் நண்பனுக்கு அளித்த சிறப்புப் பேட்டி! நாற்பது ஆண்டு காலம் கம்யூனிஸ்ட் புரட்சியினை வெற்றிகரமாக கையாண்ட நாடு நம் நாடு. பயங்கர வாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது ஒரு கூட்டு போராட்டம் என்கிறார் புக்கிட் அமான் பயங்கரவாதம் எதிர்ப்புப் பிரிவின் தலைவர் டத்தோ அயூப்கான் மைடின் பிச்சை. ஊர்கூடி தேர் இழுப்பதை போல ஒட்டுமொத்தமாக சமூகம், அரசு சாரா அமைப்புகள், சமய மன்றங்கள், கல்விமான்கள் ஆகிய தரப்புகள் காவல் துறையினருடன் கைகோர்த்துக் கொண்டு முன்னிலைப்படுத்தும் போராட்டம் இது என்கிறார் இவர். ’நண்பன்’ நாளேட்டிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அயூப்கான் அநேக அம்சங்களை இழையோட விட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு நலனை முன் னிட்டு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் நாங்கள் எந்தவொரு தரப்பின ருடனும் மன்னிப்பு கோர கடமைப்பட்டவர்கள் அல்ல. நாட்டு மக்களின் பாதுகாப்பு என்று வரும்போது இதில் விட்டுக் கொடுக்கும் போக்கிற்கு இம்மியளவும் இடம் இல்லை. நாடு அதை நாடு என்கிறார் அயூப்கான். பயங்கரவாதம் - தீவிரவாதம் என வெறுமனமே பட்டாசு கொளுத்தி போட்டு அச்ச உணர்வை ஏற்படுத்துகிறார்கள் என்பது சில தரப்பின் விதண் டாவாதமான குற்றச்சாட்டு. இது ஓர் அரசியல் சித்து விளையாட்டு என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று வாயடைத்து போயிருக்கிறார்கள். பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் தொடர் பில் பல சந்தேகப் பேர் வழிகளை முன்கூட்டியே கைது செய்து உத்தேச பயங்கரவாத தாக்குதலை நாங்கள் முறியடித்துள்ளோம். துப்பாக்கிக் கொண்டு பயங்கர வாதியை சுட்டுக் கொல்லலாம். ஆனால், பயங்கரவாதத்தையோ அல்லது தீவிரவாதத்தையோ முற்றாக துடைத் தொழிக்க வேண்டுமானால், அதன் மூல வேர்களை நாம் தேடிச் செல்ல வேண்டும். வீடு திருந்தினால் வீதி திருந்தும். வீதி திருந்தினால் நாடு திருந்தும். அஸ்திவாரமே ஆட்டம் காணுமானால் அனைத் தும் அனர்த்தம் என்று எச்சரிக்கு ம் அயூப்கான், இங்கே இதோ நமக்காக வழங்கிய நேர்க் காணல்: கே: பயங்கர வாதம் எதிர்ப்பு டிவிசனின் பணியும் பாணியும் என்ன? ப: புக்கிட் அமான் போலீஸ் சிறப்பு பிரிவில் பயங்கர வாதிகள், தீவிர வாதிகள் ஆகியோரின் நடமாட்டங்களை கண்காணித்து காரியமாற்றும் பிரிவு இது. Seksyen Counter Terrorism (E8) என்ற பெயரில் இயங்கும் இப்பிரிவிற்கு தலைமை உதவி இயக்குன ராக நான் தலைமையேற்றுள்ளேன். கே: நமது நாட்டின் அனு பவம்தான் என்ன? ப:பயங்கரவாதிகள் மருட்டல் என்பது மலேசியாவிற்கு ஒரு புதிய விவகாரம் அல்ல. 1949லிருந்து 1989ஆம் ஆண்டு வரை அரசை கவிழ்ப்பதற்காக கொரில்லா போர் முறையினை கையாண்ட கம்யூனிஸ்டுகளை நாம் களை எடுத்துள்ளோம். உயிர் இழப்பு விலை மதிப்பு இல்லா ஒன்று. தங்களின் இன்னுயிரை பணயம் வைத்து கம்யூனிஸ்டுகளின் மத்தியில் வேவு பார்த்தவர்கள் காவல் துறையினர். உயிர் இழந்த 2083 பேரில் 1,444 பேர் காவல் துறையினர். கே: ஆலய உடைப்புக்கும் பயங்கரவாதிகளின் நடவ டிக்கைக்கும் சம்பந்தம் உள்ளதா? ப:ஈப்போவில் ஓர் ஆலய உடைப்பு நிகழ்ந்துள்ளது. மனநிலை கார ணமாக ஆடவர் ஒரு வர் செய்த கைங்கரி யம் இது. இதற்கும் பயங்கர வாத அமைப்புக் கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று எங்களின் உளவுத்துறை தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. (continue- tomorrow)
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்