கிள்ளான் பெரிய மருத்துவமனையில் கடந்த திங்கட் கிழமை மரணமடைந்ததாகக் கூறப்படும் ஐந்து வயது சிறுமி லாரணியாவில் பெர்ட் மரணம் தொடர்பில் அம்மருத்துவமனை வெளியிட்டுள்ள அச்சிறுமியின் மரணம் பற்றிய அறிக்கையில் முரணான தகவல்கள் உள்ளதாகவும், அதில் உண்மை கிடையாது என்றும் லாரணியா வின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் பத்திரிகை வாயிலாக அம்மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் அளித்திருக்கும் விளக்கம் உண்மையற்றது என்று லாரணியா வின் சித்தப்பா டேவிட் ( வயது 38) கூறினார்.மருத்துவமனையில் லாரணி யாவை சேர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட வழியிலேயே அவர் இறந்து விட்டார் என மருத்துவர் கூறுவது உண்மைக்கு முரணாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். மருத்துவமனை அவசரப்பிரிவில் குழந்தையை சேர்க்கும்போது அவர் உயிருடன் இருந்தார் என்றும் அங்கு அவருக்கு உடனடியாக பெம்பெர்ஸ் மாற்றப் பட்டது என்றும் அங்கு சிபிஆர் (இககீ) முதலுதவி செய்யப்பட்டது என்றும் அவர் சொன்னார். அப்படி இறந்திருந்தால் எதற்காக அந்த முதலுதவி செய்யப் பட்டது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். நேற்று இங்குள்ள வட கிள்ளான் போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக மருத்து வமனைக்கு எதிராக போலீஸ் புகாரை செய்த பின்னர் அவர் இதனை கூறினார். சிறுமி லாரணியா மரணம் தொடர்பில் தெளிவான விசாரணை தேவை என்று அவர் தெரிவித்தார்.இதனிடையே தன் மகள் லாரணியா மரணம் தொடர்பில் உண்மை விளக்கம் வேண்டும் என்று லாரணியாவின் தாயார் பிரேம்ஸ்ரீ புஸ்பநாதன் கேட்டுக் கொண்டார். இவ்விவகாரத்தில் மருத்துவமனையும் சுகாதார அமைச்சும் உண்மையை தெரிவிக்க வேண்டும் என அவர் நினைவுறுத்தினார். இதில் தெளிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் போலீஸ் தரப்பையும் கேட்டுக் கொண்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்