சுங்கத்துறையின் புதிய தலைமை இயக்குநராக டத்தோ சுப்பிரமணியம் துளசி நியமிக்கப் பட்டிருப்பதாக அரசாங்க தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் அலி ஹம்ஸா கூறினார்.இந்த நியமனம் நேற்று வெள்ளிக்கிழமை அமலுக்கு வந்தது. சுங்கத் துறை துணை தலைமை இயக்குநராக (அமலாக்கம்) முன்பு பதவி வகித்த சுப்பிரமணியம் (வயது 58), புதிய பதவியை டத்தோஸ்ரீ கஸாலி அகமட்டிடம் இருந்து ஏற்கிறார். நிர்வாக மேலாண்மை, வரி மேலாண்மை மற்றும் அமலாக்கத் துறையில் அவருக்கு பரந்த அனுபவம் உண்டு.அவர் தனக்கிருக்கும் அனுபவம், அறிவுத் திறன், நம்பகத் தன்மை ஆகியவற்றைக் கொண்டு தனது பொறுப்புகளை ஆக்ககரமாக மேற்கொள்வார் எனவும் உலக தர சுங்கத்துறை சேவையை வழங்கும் இலாகாவின் தூரநோக்கு திட்டத்தை தொடர்வார் எனவும் நான் நம்புகிறேன் என்று அலி ஓர் அறிக்கையில் கூறினார். 1984 ஜூலை 29ஆம் தேதி சுங்கத்துறை அமலாக்க அதிகாரியாக அரசாங்க சேவையில் இணைந்த சுப்பிரமணியம் கடந்த 33 ஆண்டுகளுக்கு மேலாக அரசாங்கத்தில் பணியாற்றியுள்ளார்.சுங்கத்துறை புலனாய்வு (அமலாக்கப் பிரிவு) இயக்குநராகவும் சுங்கத்துறை புலனாய்வுப் பிரிவின் தலைமை உதவி இயக்குநராகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்