ஒரு ஜோடிக்கு இடையே மூண்ட சண்டை பெரும் சோகத்தில் முடிந்தது. அந்த ஆடவன் தன் காதலியை கத்தியால் குத்தி கொன்றதுடன் தானும் தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் இறங்கினான்.ஒரு கார் உபரிபாக விற்பனை பிரதிநிதியான அந்த 25 வயது ஆடவன், நேற்று வெள்ளிக்கிழமை காலையில் உடல், கழுத்து, மணிக் கட்டு ஆகிய பகுதிகளில் காணப் பட்ட கத்திக்குத்து காயங்களுடன் சரவா பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக சரவா குற்றப் புலனாய்வுத் துறை தலைவர் மூத்த உதவி ஆணையர் டத்தோ தேவ் குமார் கூறினார். இருபது வயது கடை உதவியாள ரான தன் காதலியுடன் வாக்குவாதம் மூண்டதைத் தொடர்ந்து அவரை தான் கத்தியால் குத்தியதாக அந்த விற்பனைப் பிரதிநிதி போலீசாரி டம் கூறியுள்ளார்.சரவா லியாங் கீ வர்த்தக மையத் தில் அந்தப் பெண் வாடகைக்கு தங்கியிருந்த அறையில் இச்சம் பவம் நிகழ்ந்தது. சம்பவ இடத் திற்கு விரைந்து சென்ற போலீசார், அறையில் தரை மீது விரிவிக்கப்பட் டிருந்த மெத்தையில், அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டனர். அவரது கழுத்தில் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன. அவர ருகே ஒரு ரத்தம் தோய்ந்த கத்தியும் கிடந்தது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்