ஐஎஸ் அமைப்புடன் தொடர் புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 9 நபர்களை புக்கிட் அமான் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவின் போலீஸ் அதி காரிகள் கைது செய்துள் ளனர். கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை சிலாங்கூர், பேரா, கெடா, கிளந்தான், ஜொகூர் ஆகிய மாநிலங்களில் அவ்வதிகாரிகள் அதிரடி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இச்சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்தின் அடிப்படையில் அந்த 9 நபர்களை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்று தேசிய போலீஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் நேற்று கூறினார். மார்ச் 15ஆம் தேதி சிலாங்கூர் கிள்ளானில் மேற்கொண்ட முதல் சோதனை நடவடிக்கை யின் போது ‘காகாக் ஈத்தாம்’ எனும் கும்பலைச் சேர்ந்த 27 வயது ஆடவனை போலீசார் கைது செய்தனர். கடந்தாண்டு ஜூன் மாதத்தில் பூச்சோங் மூவிடா கிளப்பின் மீது கையெறி குண்டு வீசிய சம்பவத்திற்கும் இக்கும்பலுக்கும் தொடர்புள் ளது என்று அவர் தெரிவித்தார். மார்ச் 16ஆம் தேதி கூலிம் கெடா, ஈப்போ பேரா ஆகிய இடங்களில் மேற்கொண்ட இரண்டாவது சோதனை நடவடிக்கையின் போது 37 வயது, 39 வயதுடைய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் ஆரம்பப் பள்ளியின் ஆசிரியர் ஆவார். இவர் ஐஎஸ் அமைப்பு குறித்து பல தகவல்களை முகநூலில் பரப்பியுள்ள ஆதாரம் போலீசுக்கு கிடைத்துள்ளது.அதே வேளையில் மற்றொருவர் ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக இந்நாட் டில் செயல்பட்டு வந்துள்ளார் என்று அவர் குறிப்பிட்டார். மார்ச் 17ஆம் தேதி 21 வயது, 28 வயதுடைய இரு ஆடவர் களை போலீசார் கைது செய் தனர். இவர்களில் ஒருவர் சாப் பாட்டுக் கடையிலும், மற்றொரு வர் கால்நடை விற்பனைக் கடையிலும் பணியாற்றி வந்துள்ளனர்.இதில் சாப்பாட்டுக் கடையில் பணியாற்றி வந்த ஆடவர் தாப்பா போலீஸ் நிலையத்தின் மீதே தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். மேலும் இவர் இந்தோனேசியாவில் உள்ள ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு கொண்டு வெடி குண்டுகளைப் பெறுவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இதே போன்று கோலக் கிராய், கோத்தா பாரு, சிகாமட் ஆகிய இடங்களில் இருந்தும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர் கள் என்று டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் செய்தியாளர்களிடம் கூறினார். குற்றவியல் சட்டம் மற்றும் பயங்கரவாத சட்டத்தின் கீழ் அவர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்