கழுத்து அறுக்கப்பட்டு எரியூட்டி மிகவும் கோர மாக கொலை செய்யப்பட்ட மின்னியல் நிறுவனம் ஒன்றின் குமாஸ்தா லெட்சுமி த/ பெ வரதன் (வயது 42) படுகொலையில் மேலும் பலர் சம்பந்தப்பட்டு இருக்கக்கூடுமா? என்று போலீசார் தற்போது துருவித் துருவி விசாரணை செய்து வருகின்றனர். இச் சம்பவம் தொடர்பில் ஓர் இந்தியப் பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டு இருந்த போதிலும் மேலும் பலர் கைது செய்யப்படுவதற்கான சாத்தியம் இருப்பதை போலீசார் மறுக்கவில்லை. இதுவரையில் கைது செய்யப்பட்ட மூன்று இந்தியர்களையும் விசாரணைக்கு ஏதுவாக ஒரு வாரம் தடுப்புக்காவலில் வைப்பதற்கு தென் கிள்ளான் மாவட்ட போலீசார் நேற்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்றுள்ளனர். இந்த கொலைக்கு பின்னணியாக இருந் தவர்களையும் போலீசார் தேடி வருவதாக அறியப்படுகிறது. ஜாலான் பந்திங், தெலுக் பங்லீமா காராங்கில் உள்ள அம்கோ எனப்படும் முன்பு தொஷிபா மின்னியல் நிறுவனமாக விளங்கிய தொழிற்பேட்டையில் கியூ.சி. எனும் குமாஸ்தாவாக வேலை செய்து வந்த லெட்சுமியின் சடலம், கடந்த புதன்கிழமை அதிகாலை 3.20 மணியளவில் கிள்ளான், ஜாலான் லங் காட், தாமான் கிளாங் ஜெயா, ஜாலான் செலாம்பீட் 25 எனும் சாலையில் எரிக்கப்பட்ட ஒரு காருக்கு அருகில் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. கழுத்து அறுக்கப்பட்டு, முகத்தில் ஆழமான காயங்களுடன் எரியூட்டப்பட்ட நிலையில் கிடந்த லெட்சுமியின் சடலம் போலீசாரால் மீட்கப்பட்டு, கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா பெரிய மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரின் சடலத்தின் அருகில் மூன்று கைப்பேசிகள் கண்டு எடுக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் புதன்கிழமை மதியத்தில் கிள்ளானில் உள்ள ஓர் உணவகத்தில் லலிதாம்பாள் த/பெ பத்மநாபன் (வயது 36) என்பவரையும் பின்னர் பிற்பகல் 1.40 மணியளவில் ஒரு டயர் கடையில் ரகுநாதன் த/பெ கணேசன் (வயது 29) என்பவரையும் மற்றும் கிள்ளான், தாமான் டேசாவில் 20 வயதுடைய பிரபுதேவா த/பெ ஆறுமுகம் என்பவரையும் இக்கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உதவும் வகையில் போலீசார் கைது செய்துள்ளனர். கொலை நடந்த முறையை அடிப்படையாக கொண்டு பார்க்கும் போது இதுவொரு திட்டமிட்ட கொலை என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டு இருக்கக்கூடும் என்று அவர்கள் சந்தேகிக்கின்றனர். லெட்சுமியின் உடல் மீது நடத்தப்பட்ட சவப்பரிசோதனையில் கழுத்து கிட்டத்தட்ட துண்டிக்கப்படும் அளவிற்கு ஆழமான வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. வலது புற தாடை, இரு புற கன்னத்திலும் காயங்கள் காணப் பட்டுள்ளன. உடலின் பின்புறம் மற்றும் தலைமுடி எரிந்து காணப்பட்டது. உயிரிழந்த லெட்சுமி, சிலாங்கூர் கேரித்தீவில் பிறந்தவர். சில மாத காலமாக தனியாக இங்கு தாமான் டேசா உத்தாமாவில் வசித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தன் கணவரை அவர் விவாகரத்து செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு இரு பிள்ளைகள் உள்ளன.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்