அபு சாயாப் தீவிரவாத கும்பலால் கடத்தப்பட்ட மலேசியர்களில் இருவர் பத்திரமாக மீட்கப்பட்டனர். தென் பிலிப்பைன்ஸ் அருகே நீரிணையில் நடந்த அதிரடி வேட்டையின்போது இவர்கள் காப்பாற்றப்பட்டனர். கடந்த ஆண்டு ஜூலை 18ஆம் தேதி, மீன் பிடிக்க சென்ற ஐந்து மலேசியர்களை தென் பிலிப் பைன்சில் இயங்கும் அபு சாயாப் கும்பல் கடத்தியது. அவர்களை விடுவிக்க, பிணைப் பணமாக 100 மில்லியன் பெசோஸ் (10 மில்லி யன் வெள்ளி) வரை கடத்தல்காரர் கள் கேட்டனர். ஆனால், கேட்ட பணத்தைக் கொடுக்கமுடியாத நிலையில் கடத்தியவர்களை விடுவிக்க அவர்கள் மறுத்தனர். இந்நிலையில், பிலிப்பைன்ஸ் கடற்படையினர் ஜோலோஸ் தீவு பகுதியில் நேற்று அதிகாலை நடத்திய அதிரடி வேட்டையில், பணையாளிகள் மீட்டதாக கூறப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்கள் 26 வயது பேண்டி மற்றும் அப்துல் ரஹிம் (வயது 62) என அடை யாளம் கூறப்பட்டுள்ளது. கடத்தப் பட்ட மற்றவர்கள் வேறு எந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்