மெங்களம்புவில் கடல் உணவு உணவக உரிமையாளர் கூய் வோன் பியூவும் அவரின் மனைவியும் அன்றைய வியாபாரத்திற்குப் பின்னர் தங்களது கடையை மூடவிருந்த வேளையில் அங்கு வந்த இரண்டு ஆடவர்களால் கடுமையாக தாக்கப்பட்டனர். அவர்களில் ஒருவன் பாராங் கத்தி வைத்திருந்தான். இந்த சம்பவம் கடந்த வாரம் திங்கட்கிழமை நிகழ்ந்தது. பாராங் கத்திவைத்திருந்த ஆடவன் கடையினுள் நுழைந்தவுடன் தனது தலையின் இடது பக்கத்தில் வெட்டி யதாக கூய் கூறினார். எங்களுடைய மைகார்ட், டிரைவிங் லைசென்ஸ், ரொக் கம் சுமார் 2,600 வெள்ளி ஆகி யவை வைக்கப்பட்டிருந்த எங்க ளது பைகளை அவ்விருவரும் பறித்தனர். என் மனைவியின் விவேக தொலைபேசியும் காணாமல் போய்விட்டது என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். மெங்களம்பு சட்டமன்ற உறுப்பினர் லிம் பெக் ஹார், கடந்த சனிக்கிழமை பேரா ஜசெக தலைமையகத் தில் இந்த செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். இரவு 11.40 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தைத் தொடர்ந்து கூய் அருகிலுள்ள ஒரு 24 மணிநேர மருந் தகத்தில் சிகிச்சை பெற்றார். தலையில் ஏற்பட்ட காயத்திற்காக அவருக்கு பத்து தையல்கள் போடப்பட்டன. தங்களது உணவகத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத் தப்பட்டிருந்த போதிலும், துரதிர்ஷ்டவசமாக அப்போது அவை இயங்கவில்லை என்றும் அவர் கூறினார். எங்களைத் தாக்கிய ஆடவர் களை அடையாளம் காண இயல வில்லை. என் மனைவியும் நானும் உடனடியாக போலீஸில் புகார் செய்தோம் என்றார் கூய். இந்த செய்தியாளர் சந்திப் பில் கலந்து கொண்ட பத்து காஜா நாடாளுமன்ற உறுப் பினர் வி.சிவகுமார், கொள்ளை முயற்சியின்போது இழப்புகள் ஏற்படாவிட்டாலும்கூட போலீசில் புகார் செய்யும்படி மக்களை கேட்டுக் கொண்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்