லோரியிலுள்ள மரங்களை கீழே இறக்குவதற்காக கட்டப்பட்டிருந்த இரும்பு சங்கிலிகளை கழட்டும்போது மரம் கீழே விழுந்ததில் லோரி ஓட்டுநர் உடல் நசுங்கி மாண்டார்.இச்சம்பவம் அஜிலிலுள்ள மரப்பலகை தொழிற்சாலையில் நிகழ்ந்துள்ளது. பண்டார் வாரிசான் புத்ரியைச் சேர்ந்த அஸ்மான் அசிஸ் (வயது 56) இச்சம்பவத்தில் உயிரிழந்தார். இதன் தொடர்பில் காலை 9.40 மணியளவில் போலீசுக்கு தகவல் வழங்கப்பட்டதாக உலு திரங்கானு மாவட்ட போலீஸ் படைத் தலைவர் முகமட் அட்லி மாட் டாவுட் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் மேல் விசாரணை தொடரப்பட்டு வருகிறது. பிரேதப் பரிசோதனைக்காக உயிரிழந்தவரின் சடலம் உலு திரங்கானு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக முகமட் அட்லி தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்