வடக்கு தெற்கு நெடுஞ் சாலையில் போர்ட்டிக்சன் டோல் சாவடி அருகே நிகழ்ந்த கோர விபத்தில் ஒரு பெண் ஓட்டுநர் இறந்தார். மூன்று கார்கள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட இந்த விபத்தில் 5 குழந் தைகள் உட்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். டொயோட்டா இன் னோவா காரை ஓட்டிச் சென்ற பெண் ஓட்டுநர் காரிலிருந்து வெளியே எறியப்பட்டதால் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்தார். ஒரு டொயோட்டா வியோஸ் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள புறத் தடுப்பை மோதி சாலையின் குறுக்கே நின்றது. இந்தக் காரை விலகமுடியாமல் ஒரு டொயோட்டா இன்னோ வாவும் புரோட்டோன் பிரே வேவும் மோதின. அப்போது இன்னோவா காரில் 7 பயணி களும் பிரேவே காரில் ஒரு தம்பதியரும் இருந்தனர். வேகமாக மோதியதில் பிரேவே காரின் முன்புறத்தில் இயந்திரம் தீப்பிடித்தது. ஆனால், அதில் இருந்த இரு வரையும் பொதுமக்கள் தக்க சமயத்தில் வெளியேற்றி காப் பாற்றினர். தகவல் கிடைத்த வுடன் சம்பவ இடத்திற்கு 10 தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்து நிலைமையை கட்டுப்படுத்தினர்.இறந்தவரின் சடலம் துவாங்கு ஜபார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. காயமுற்ற அனைவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்