குளியல் அறையின் நீர் குழாயில் சிறுவனின் கால் சிக்கியதால் அவர் ஒரு மணிநேரமாக வலியால் துடித்துள்ளான். இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் ஜாலான் துன் அப்துல் ரஹ்மான் யாக்கிலுள்ள இரட்டை மாடி வீட்டில் நிகழ்ந்துள்ளது. வீட்டின் மேல் மாடியிலுள்ள குளியல் அறையில் 3 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மாலை 4.16 மணியளவில் தகவல் கிடைத்ததும் 7 தீயணைப்பு அதிகாரிகள் அங்கு விரைந்ததாக சரவா மாநில தீயணைப்புப் படையின் துணை இயக்குநர் தி யோங் லிங் ஹி தெரிவித்தார். அங்கு சென்று பார்க்கையில் அச்சிறுவனின் இடது கால் நீர் குழாயின் துவாரத்தில் சிக்கிக் கொண்டிருந்தது. கீழ் மாடியிலுள்ள நீர் குழாயை வெட்டி எடுத்த பின்னர் அச்சிறுவனின் கால் மேல் பகுதிக்கு தள்ளப்பட்டது.சிறுவனின் காலில் சொற்ப காயங்கள் ஏற்பட்டுள்ளன. மருத்துவ சிகிச்சைக்காக அச்சிறுவனின் பெற்றோர் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக லிங் ஹி தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்