பகாங், லஞ்சாங் தமிழ்ப்பள்ளிக்காக 70 லட்சம் வெள்ளி செலவில் கட்டப்பட்ட நவீன கட்டடத்தின் கட்டுமானப் பணி பூர்த்தி அடைந்து ஓராண்டிற்கு மேலாகியும் பள்ளியை பயன்படுத்துவதற்கு தடையாக இருக்கும் 700 மீட் டர் தூரமுள்ள சாலை நிர்மாணிப்பில் சிக்கலுக்கு தீர்வு காணப்படாமல் மாணவர்களின் நலன்கள் புறக் கணிக் கப்படுவது ஏன்? தமிழ்ப்பள்ளிகளின் காவலனாகவும், மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் நிலைத்திருப்பதற்குக் காரணகர்த்தா எனவும் அறிக்கைகளை வெளியிட்டிருக்கும் நிலையில் பகாங், லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்காகக் கட்டப் பட்டிருக்கும் ரிம 7 மில்லியன் (ரிம 70 லட்சம்) தொகையிலான நவீன கட்டடத்தின் கட்டுமானம் நிறைவடைந்து ஓராண்டிற்கு மேலாகியும் இன்றுவரை பள்ளியைப் பயன்படுத்துவதற்குத் தடையாக இருக்கும் சுமார் 700 மீட் டர் தூரமுள்ள சாலை நிர்மாணிப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைக் களைவதற்கு; * மலேசியக் கல்வியமைச்சின் கட்டுமானப் பிரிவு * மலேசியக் கல்வியமைச்சின் அமைச்சர் டத்தோஸ்ரீ மகாட்ஸிர் காலிட். * மலேசியக் கல்வியமைச்சின் துணைக் கல்வியமைச்சர் டத்தோ ப.கமலநாதன். * கல்வியமைச்சினால் நியமனம் செய்யப்பட்டிருக்கும் திட்ட மேலாண்மை ஆலோசக நிறுவனம் (PMC) * மஇகாவின் கல்விக் குழுவின் பொறுப்பாளர்கள் மற்றும் * லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நிர்வாகம் ஆகியோர் இன்றுவரை ஆக்ககரமான செயல்பாடுகளைச் செய்யாமல் மேலும் மேலும் சிக்கல்களை உருவாக்கி வருவது வேதனையான விவகாரமாக நண்பன் குழு கருதுகின்றது! மானியத்தின் பயன்பாட்டை மாற்றவே முடியாதா? நண்பன் குழுவிற்குக் கிடைத்த தகவல்களின்படி லஞ்சாங் தோட்டத் தமிழ்ப் பள்ளியின் குத்தகை பெர்காமோ டிசைன்ஸ் நிறுவனத்திற்கு கட்டுமானத் திட்டம் மற்றும் கட்டுமானம் (Design & Build) என்பதன் அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த நிலையில் கட்டுமானத்திற்கு உட்படாத சாலையின் நிர்மாணிப்பிற்காக கூடுதல் தொகைக்கான விண்ணப்பத்திற்கு ஏற்ற வகையில் புதிய கட்டுமானத்திற்கு உட்பட்ட பள்ளிக்கு டத்தோ ப.கமல நாதன் ரிம.400,000 ஒதுக்கீடு செய்திருந்த நிலையில் பள்ளி மேலாளர் வாரியம் (திட்ட மேலாண்மை ஆலோசக நிறுவனத்தின் பொறுப்பாளர் உட்பட) அத்தொகையினைச் சாலையை அமைப்பதற்கு வழங்கக்கூடாது என்ற நிலைப்பாட்டினால் சுமார் 20 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதற்கு யாரும் வருந்துவதாகத் தெரியவில்லை. * புதிதாகக் கட்டப்பட்டுள்ள பள்ளிக்கு ரிம. 4 லட்சம் தொகை ஏன் ஒதுக்கப்பட்டது? * புதிய பள்ளி என்பதன் அடிப்படையில் 24 மாதங்களுக்கான உத்தரவாதம் உள்ளபோது கரையான் மருந்தையும் மின்சார சீரமைப்பையும் செய்ய வேண்டிய அவசியம் உள்ளதா? * குத்தகையாளரின் சார்பில் பள்ளிக்கான கட்டுமானத்தினை நிறைவு செய்ய வேண்டிய திட்ட மேலாண்மை ஆலோசக நிறுவனம் தடையாக இருப்பது ஏன்? * ஓராண்டிற்கும் மேலாக இழுபறியில் இருக்கும் விவகாரத்திற்கு டத்தோ ப.கமலநாதனால் தீர்வு காண முடியாதா? * ஒட்டுமொத்த மலேசியர்களும் அறிந்த விவகாரமான லஞ்சாங் தமிழ்ப்பள்ளிக்கு தீர்வே கிடைக்காதா? போன்ற கேள்விகள் பதில் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன என்பது மட்டும் தெளிவான உண்மையாகும்! பகாங் லஞ்சாங் தோட்ட புதிய தமிழ்ப் பள்ளியை மாணவர்கள் பயன்படுத்த முடியுமா? என்ற கேள்விக்கு நாளை பதில் தேடுவோம்! * பள்ளிக்கான சாலை நிர்மாணிப்பு பிரச்சினையைத் தீர்க்க ஓராண்டு தேவையா? * திட்ட மேலாண்மை ஆலோசக நிறுவனத்தின் பங்குதான் என்ன? * கமலநாதனுக்கு தமிழ்ப்பள்ளிகளின் மீது கவனம் செலுத்த நேரமில்லையா? * ரிம 4 லட்சத்திற்கான மாற்று நடவடிக்கைக்கான அனுமதியை ஏன் வழங்க முடியாது?
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்