மலேசிய விமான நிறுவனத்திற்குச் சொந்தமான எம்.எச். 370 விமானம், தென்னாப்பிரிக்கா, கேப் டவுன் கடல் பகுதியில்தான் விழுந்து இருக்க வேண்டும் என்று அமெரிக்கா விமானப்படையின் முன்னாள் அதிகாரி கூறுகிறார். அந்த மலேசிய விமானம் தென்னாப்பிரிக்கா, கேப் டவுன் கடல்பகுதியில் விழுந்து கிடப்பதை கூகுள் பூமியியல் ஆய்வின்வழி கண்டறிந்துள்ளதாக அவர் கூறுகிறார். 239 பேருடன் கடந்த 2014 மார்ச் 8 ஆம் தேதி கோலாலம் பூரிலிருந்து பெய்ஜிங்கை நோக்கி புறப்பட்ட அந்த போயிங் விமானம், விபத்துக்குள்ளாகி விட் டதாக அறிவிக்கப்பட்ட போதிலும் இன்று வரையில் அதன் உடல் பகுதி கண்டுபிடிக்கப்படாதது உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. யூ.எஃப்.ஓ.சைட்டிங் பத்திரிகையின் ஆசிரியருமான ஸ்கோட் சி. வாரிங், தென்னாப்பிரிக்கா, கேப் டவுன் கடல் பகுதியில் நன்னம்பிக்கை முனையில் அந்த விமானம் விழுந்து கிடப்பதை கூகுள் பூமியியல் ஆய்வின்வழி கண்டறிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் என்று லண்டனை தளமாக கொண்டு வரும் சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது. இதன் காரணமாகவே அந்த விமானத்தின் ஒரு சில பகுதிகள் தென்னாப்பிரிக்கா கண்டத்தில் உள்ள ரீ யூனியன், மொரிசியஸ் நாடுகளின் கடல் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டு வருகிறது. தாம் சொல்கின்ற பகுதியில் விமானத்தை தேடும் பணியை மேற்கொள்ளப்படுமானால் விமானம் காணாமல் போனதற்கான மர்மத்தை கண்டு பிடிக்க முடியும் என்று அவர் உறுதியாக கூறுகிறார். விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சி இந்தியப் பெருங்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அது வெற்றியை தரவில்லை. விமானத்தின் எண்ணெய் கசிந்ததில் அது கிட்டத்தட்ட 12,779 கிலோ மீட்டர் தூரம் வரையில் கடல் பரப்பில் கலந்துள்ளது. அதில் ஆயிரம் கிலோ மீட்டருக்கும் மேல் கேப் டவுன் நன்னம்பிக்கை முனையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த நன்னம்பிக்கை முனை என்பது கேப் டவுனிலிருந்து கிட்டத்தட்ட 400 அல்லது 500 கிலோ மீட்டர் தூரம்தான் என்று அவர் கூறுகிறார். அதேவேளையில் விமானம் கடலில் விழுந்து கிடக்கும் காட்சியை கூகுள் பூமியியல் ஆய்வின் வழி கண்டறிந்து இருப்பதையும் உறுதிப்படுத்தும் வகையில் அந்தப் படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்