ஈப்போ நீதிமன்ற காவலிலிருந்து லோரிக்கு கொண்டு செல்லும் நேரத்தில் தப்பிச் சென்ற கைதி இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் பிடிபட்டுள் ளார்.விசாரணைக்காக நீதிமன்றம் கொண்டு வரப்பட்ட அவர், நேற்று முன்தினம் மாலை 4.45 மணியளவில் போலீசாரிடமிருந்து தப்பியுள்ளார்.அவரைப் பிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் தஹான் நடவடிக்கையின் மூலம் அவர் மீண்டும் பிடிபட்டதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் சம் சாங் கியோங் தெரிவித்தார். புந்தோங்கைச் சேர்ந்த 26 வயதுடைய அந்நபருக்கு ஜாமின் தொகையாக வெ.4 ஆயிரத்தை நீதிபதி விதித்தார். அத்தொகையை கட்ட முடியாத பட்சத்தில் அக்கைதி தப்பிச் செல்ல முயற்சி செய்திருக்கலாம் என நம்பப்படுகிறது. நீதிமன்றத்திலிருந்து இவருடன் சேர்ந்து 22 கைதிகள் போலீஸ் வேனுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அச்சமயம் பார்த்து இந்த ஆடவர் போலீசிடமிருந்து தப்பி அருகிலுள்ள புதருக்குள் ஓடி மறைந்துள்ளார். புதருக்கு பக்கத்திலுள்ள ஆற்றில் மறைந்து கொண்டிருந்த கைதியை போலீசார் சுற்றி மடக்கி கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் அவரை லோரிக்கு கொண்டு சென்ற அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும். கவனக் குறைவினால் இந்த சம்பவம் நேர்ந்திருந்தால், சம்பந்தப்பட்ட அதி காரிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என சாங் கியோங் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்