பினாங்கு மாநில அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ளப்பட்ட பத்துகவான் தோட்டத்தில் வசிக்கும் பாதிக்கப்பட்ட 14 இந்தியக் குடும் பங்களின் பிரச்சினை கள் முழுமையாக தீர்க்கப் படாத நிலையில் குடியிருக்கும் வீடுகளை காலி செய்யும் தோரணையில் மேற்கொள் ளப்படும் நடவடிக்கை களை எதிர்த்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இத்தோட்ட நிலத்தில் மேம்பாட்டு திட்டங்களை தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் மேற்கொள்ளவிருக்கிறது. அதற்கு ஈடாக உரிய இழப்பீடோ அல்லது ஒரு வீட்டையோ கேட்டு பாதிக்கப்பட்ட மக்கள் போராடி வருவதாக தோட்ட நடவடிக்கை குழுவின் தலைவர் மூ.வி.மதியழகன் தெரிவித்தார். இப்பிரச்சினைக்கான மூன்று சுற்று பேச்சுகள் முடிவடைந்த நிலையில், சுமுகமான தீர்வு காணப்படாமல் இருக்கும் வேளையில், கனரக வாகனங்களை கொண்டு வந்து தோட்ட வீடுகளை உடைக்க முற்படுவது எந்த வகையில் நியாயம் என அவர் கேள்வி எழுப்பினார். நான்காவது சுற்று பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மேம்பாட்டு நிறுவனம் வரும் 26.3.2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு பாதிக்கப்பட்ட 14 குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்த அறிவித்துள்ளது. வீடுகளை உடைக்க சம்பந்தப்பட்டவர்கள் முற்பட்டபோது மக்கள் அதிருப்தி அடைந்ததாக மூ.வி.மதியழகன் சொன்னார். பேச்சுவார்த்தைகள் தோல் வியில் முடிந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்காவிட்டால் இப் பிரச்சினையை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வேன் என மூ.வி.மதியழ கன் சூளுரைத்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்