சிலாங்கூர் மாநில அரசுக்கு சொந்தமான பொது மண்டபத்தில் தங்களுக்கு மூன்று நாட்கள் மட்டுமே நிவாரணம் அளிக்கப் பட்டது குறித்து காப்பார் தாமான் செந்தோசா தீ சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இந்தியக் குடும்பங்கள் ஏமாற்றம் தெரிவித்தன.இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் நலனில் மாநில அர சுக்கு அக்கறை இல்லாத போக்கையே இந்த நடவடிக்கை காட்டுவதாக காப்பார் தேசிய முன்னணி சமூக நலப் பிரிவின் தலைவர் அகமது ரிடுவான் யஹாயா சாடினார்.வீடுகளையும், உடைமைகளையும் தீயில் பறிகொடுத்துவிட்டு பரிதவிக்கும் அக்குடும்பங்களை மாநில அரசு வீதியில் நிறுத்தி வேடிக்கைப் பார்ப்பதா? என்று காப்பார் மஇகா தொகுதி காங்கிரஸ் தலைவர் மா.கோபாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை பகல் 2.00 மணியளவில் டேவான் ஸ்ரீ கிராயோங்கிலிருந்து அக்குடும் பங்களை வெளியேறும்படி அப்பொது மண்டபத்தின் பாது காவலர்கள் கட்டாயப்படுத்தியதாக நம்பப்படுகிறது.வாடகை வீடுகளை தேடிக் கொள்ளும்படிக் கூறி எங்களுக்கு மூன்று நாட்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட பொது மண்டபத்தில் தங்குவதற்கு இடமளித்த கிள்ளான் மாவட்ட அலுவலகத்தின் போக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்றும் தீ பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத எங்களிடம் வாடகை வீடுகளை தேடிக் கொள்ளுங்கள் என்று கூறி மாநில அரசு தன்னுடைய கடமையை முடித்துக் கொள்வதா என்று அக்குடும் பங்கள் கேள்வி எழுப்பின. நிவாரண உதவி வழங்கும் நிகழ்வின்போது பாதிக்கப்பட்ட அக் குடும்பங்கள் தங்களுடைய மனக் குமுறலை தொகுதி தேசிய முன்னணி செயற் குழு வினரிடம் கொட்டித் தீர்த்தனர்.வாடகை வீடுகளுக்கு குடியேறும் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு அதற்கான முன் பணமும் வாடகைப் பணமும் வழங் குவதாக செமந்தா சட்ட மன்ற உறுப்பினரும், மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான டாக்டர் டரோயா அல்வி உறுதி யளித்துள்ளார். எங்களுக்கு ஏழு மாத வாடகைப் பணம் வழங்கப்பட வேண்டும் என்று அக்குடும்பங்கள் கோரிக்கை எழுப்பின.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்