மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுப் பணிகளுக்கு முழுமையான பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருக்கும் கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன், பகாங் லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் கட்டுமான விவகாரத்தினை இழுத்தடித்து வருகின்றார் என பெற்றோர் கண்டனக் குரல் எழுப் பியுள்ளனர். பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தலைமையிலான அரசாங்கத்திற்கு மேலும் ஓர் இழுக்கினை ஏற்படுத்தும் வகையில் இவரின் இச்செயல் அமைந்துள்ளது என அவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். 2012-ஆம் ஆண்டில் பிரதமரின் நேரடியான சிறப்பு நிதியின் வழி 39 தமிழ்ப்பள்ளிகளுக்கான புதிய இணைக்கட்டடங்களும் புதிய பள்ளிக்கூடமும் நிர் மாணிக்கப்பட வேண்டும்.எனினும், இதன் கட்டுமானப் பணிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியிருப்பதற்கு கமலநாதன் முழுமையான பொறுப்பை ஏற்றுக் கொள்வாரா என்ற கேள்வியை லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கான சிறப்பு நடவடிக்கைக் குழுவின் பொறுப்பாளர்கள் முன் வைத் துள்ளனர். கமலநாதனை பொறுத்த வரையில் இதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்பது ஒரு புறமிருக்க, மலேசிய இந்திய சமூகத்திற்கும் மலேசிய தமிழ்ப் பள்ளிகளின் உரிமைக்கும் விடுக்கப்பட்டிருக்கும் சவாலாகவே நண்பன் குழு இதனை கருதுகின்றது. மேலாளர் வாரியத்தின் தலையீடுகள் ஏன்? பகாங், லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கான புதிய கட்டடத்தின் கட்டுமானக் குத்தகையை மலேசியக் கல்வியமைச்சு நேரடியாகவே இந்திய குத்தகை நிறுவனத்திற்கு வழங்கியிருந்த நிலையில், மேலும் கட்டுமானத்தினை நிர்வகிக்கும் பொறுப்பினை மலேசிய கல்வியமைச்சின் சார்பில் நியமனம் செய்யப்பட்ட கட்டுமான மேலாண்மை ஆலோசக நிறுவனம் (PMC) ஏற்றுக் கொண்ட நிலையில், கடந்த ஓராண்டுகளாக நீடிக்கும் இழுபறிக்கு பள்ளியின் மேலாளர் வாரியம் காரணமா என்ற கேள்விக்கு நண்பன் குழு பதில் தேடுகின்றது. பகாங் லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் கட்டுமானம் 100 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளது. ஓராண்டிற்கும் மேலாகி விட்ட நிலையில் பள்ளிக்கான நுழைவு அனுமதியை (CCC) மாவட்ட அலுவலகம் வழங்குதற்குத் தடையாக இருப்பது அப்பள்ளிக்கான சாலை நிர்மாணிப்பு சர்ச்சை மட்டுமே. இந்த சர்ச்சைக்கு ஓராண்டாகியும் தீர்வு காண முடியவில்லையே ஏன்? * பள்ளி மேலாளர் வாரியத்தின் அத்துமீறல்களுக்கு யார் வழிவிட்டது? * கட்டுமான மேலாண்மை நிறுவனத்தின் பொறுப்பாளர் ஏன் மேலாளர் வாரியத்தில் நியமனம் செய்யப்பட்டார்? * டத்தோ கமலநாதன் இப்பள்ளிக்கு வெ. 4 லட்சம் ஒதுக்கீட்டினை எதற்கு அங்கீகரித்தார்? * புதிய கட்டடத்திற்கு கறையான் மருந்து தெளிக்கவும் மின்சார இணைப்புக்களை சீரமைக்கவும் நிதி தேவையா? * மலேசியக் கல்வியமைச்சு 100 விழுக்காடு கட்டுமானத் தொகையை குத்தகையாளருக்குக் கொடுத்த பின்னரும் ஏன் பிரச்சினையைத் தீர்க்கவில்லை? * மஇகாவின் வழி மேற்கொள்ளப்படும் தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமானத்தில் எப்போதுமே வில்லங்கம்தானா? இது போன்ற கேள்விகளுக்கும் விடை தேவைப்படுகின்றது. கடந்த ஓராண்டாக புதிய பள்ளிக்குச் செல்லலாம் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மாண வர்களின் மனநிலையைப் பற்றி யாருமே கவலை கொள்ளாதது வேதனையிலும் வேதனையாகும்!
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்