பெட்ரோல், டீசலுக்கான புதிய விலைகள், வரும் மார்ச் 29-ஆம் தேதி தொடக்கம் வாராந்திர அடிப்படையில் அறிவிக்கப்படும் என உள்நாட்டு வர்த்தகம், கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் ஹம்சா ஜைனுடின் கூறினார்.ஒவ்வொரு புதன்கிழமையும் அந்த அறிவிப்பு செய்யப்படும். அதற்கு மறுநாள் புதிய விலைகள் அமலுக்கு வரும் என்று அவர் விளக்கம் அளித்தார். பெட்ரோல் நிறுவனங்களுடன் அண்மையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் ஒவ்வொரு புதன்கிழமையும் வாராந்திர அடிப்படையில் புதிய விலைகளை அறிவிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டதாக அவர் சொன்னார். நிர்ணயிக்கப்பட்ட விலையிலிருந்து சிறப்புக் கழிவு வழங்க விரும்பும் தனியார் நிறுவனங்களும் பெட்ரோல் நிலைய சில்லறை வியாபாரிகளும் அமைச்சிடமிருந்து அனுமதி பெற்ற பிறகு அவ்வாறு செய்யலாம். அனைத்துலக எண்ணெய் சந்தை விலையை பொறுத்து இதன் விலைகள் அமைந்திடும் என்றார் அவர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்